பேருந்தில் சூட்கேஸ் ஒன்றிலிருந்து 2 வயதான குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நியூசிலாந்தின் ஆக்லாந்திற்கு வடக்கே 60 மைல் தொலைவில் உள்ள கைவாகாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது.
நியூசிலாந்தின் தேசிய பேருந்து வழித்தடமான இன்டர்சிட்டியை இயக்கும் என்ட்ராடா டிராவல் குரூப்பின் பேருந்து ஒன்றிலே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பேருந்தில் ஒரு பயணி சூட்கேஸ் பெட்டியை அணுக அனுமதி கேட்டதை அடுத்து, பையின் உள்ளே ஏதோவொன்று அசைவதை பேருந்தின் சாரதி அவதானித்தார்.
அதனையடுத்து சாரதி சூட்கேஸைத் திறந்தபோது, அதற்குள் குழந்தை ஒன்று இருந்துள்ளது. அந்தக் குழந்தை மிகவும் சூடாக இருந்தது. ஆனால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்துள்ளது.
அதன்பின்னர் குழந்தையை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு விசேட சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தையடுத்து பெயர் குறிப்பிடப்படாத 27 வயது பெண்ணொருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
குழந்தையை மோசமாக நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.
குழந்தை நலமுடன் உள்ளதையடுத்து பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது என்று இன்டர்சிட்டியை இயக்கும் என்ட்ராடா டிராவல்ஸ் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரண்டு வயது வரையிலான குழந்தைகள் பெரியவர்களின் மடியில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று இன்டர்சிட்டி தனது வலைத்தளத்தில் பதிவுசெய்துள்ளது. அத்துடன் மூன்று வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் தேவை, மேலும் ஒரு பாதுகாவலருடன் பயணம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
சூட்கேசிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை; பெண்ணொருவர் கைது பேருந்தில் சூட்கேஸ் ஒன்றிலிருந்து 2 வயதான குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் நியூசிலாந்தின் ஆக்லாந்திற்கு வடக்கே 60 மைல் தொலைவில் உள்ள கைவாகாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது. நியூசிலாந்தின் தேசிய பேருந்து வழித்தடமான இன்டர்சிட்டியை இயக்கும் என்ட்ராடா டிராவல் குரூப்பின் பேருந்து ஒன்றிலே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேருந்தில் ஒரு பயணி சூட்கேஸ் பெட்டியை அணுக அனுமதி கேட்டதை அடுத்து, பையின் உள்ளே ஏதோவொன்று அசைவதை பேருந்தின் சாரதி அவதானித்தார். அதனையடுத்து சாரதி சூட்கேஸைத் திறந்தபோது, அதற்குள் குழந்தை ஒன்று இருந்துள்ளது. அந்தக் குழந்தை மிகவும் சூடாக இருந்தது. ஆனால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்துள்ளது. அதன்பின்னர் குழந்தையை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு விசேட சிகிச்சை வழங்கப்பட்டது. இந்தச் சம்பவத்தையடுத்து பெயர் குறிப்பிடப்படாத 27 வயது பெண்ணொருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். குழந்தையை மோசமாக நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டனர். குழந்தை நலமுடன் உள்ளதையடுத்து பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது என்று இன்டர்சிட்டியை இயக்கும் என்ட்ராடா டிராவல்ஸ் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.இரண்டு வயது வரையிலான குழந்தைகள் பெரியவர்களின் மடியில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று இன்டர்சிட்டி தனது வலைத்தளத்தில் பதிவுசெய்துள்ளது. அத்துடன் மூன்று வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் தேவை, மேலும் ஒரு பாதுகாவலருடன் பயணம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.