மீன்பிடிக்கச் சென்று கரைக்குத் திரும்ப முற்பட்ட படகொன்று திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
களுத்துறை - வாத்துவ, பொத்துபிட்டிய பகுதியில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகு ஒன்றே இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மூன்று மீனவர்கள் 'நேத்துல புதா' என அழைக்கப்படும் மீன்பிடிக் கப்பலில் இன்று (02) காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
மீன்பிடியில் ஈடுபட்ட பின்னர் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த படகில் பொத்துப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் சென்ற நிலையில் மூவரும் சிறிது நேரத்திற்குள் விபத்திலிருந்து உயிர்தப்பியுள்ளனர்.
படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதை அறிந்த சக மீனவர்கள் குழுவொன்று மற்றொரு மீன்பிடி படகு மூலம் விபத்திற்குள்ளான படகிலிருந்த மீனவர்களை மீட்டு வஸ்கடுவ கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
கரைக்குத் திரும்ப முற்பட்ட படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக தப்பிய மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று கரைக்குத் திரும்ப முற்பட்ட படகொன்று திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. களுத்துறை - வாத்துவ, பொத்துபிட்டிய பகுதியில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகு ஒன்றே இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மூன்று மீனவர்கள் 'நேத்துல புதா' என அழைக்கப்படும் மீன்பிடிக் கப்பலில் இன்று (02) காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். மீன்பிடியில் ஈடுபட்ட பின்னர் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த படகில் பொத்துப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் சென்ற நிலையில் மூவரும் சிறிது நேரத்திற்குள் விபத்திலிருந்து உயிர்தப்பியுள்ளனர். படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதை அறிந்த சக மீனவர்கள் குழுவொன்று மற்றொரு மீன்பிடி படகு மூலம் விபத்திற்குள்ளான படகிலிருந்த மீனவர்களை மீட்டு வஸ்கடுவ கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.