குருநாகல் - வாரியபொல - பாதெனிய பகுதியில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட உணவகம் ஒன்றை அடையாளம் தெரியாத கும்பல் தாக்கியுள்ளது.
இதேவேளை குறித்த உணவகத்தின் உரிமையாளரின் தலையில் தாக்கப்பட்டுள்ளதுடன், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் காயமடைந்த உணவகத்தின் உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் உணவகத்திலிருந்த உடைமைகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாகவும் இதுபோன்ற கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும்,
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசமிகளால் அடித்து நொறுக்கப்பட்ட உணவகம்; உரிமையாளரையும் தாக்கி கொலை மிரட்டல் குருநாகல் - வாரியபொல - பாதெனிய பகுதியில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட உணவகம் ஒன்றை அடையாளம் தெரியாத கும்பல் தாக்கியுள்ளது. இதேவேளை குறித்த உணவகத்தின் உரிமையாளரின் தலையில் தாக்கப்பட்டுள்ளதுடன், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் காயமடைந்த உணவகத்தின் உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் உணவகத்திலிருந்த உடைமைகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முன்னதாகவும் இதுபோன்ற கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.