தொடங்கொட பிரதேச சபைத் தவிசாளர் பயணித்த வாகனம் இன்று (02) காலை 9 மணியளவில் விபத்திற்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடங்கொட பிரதேசசபைத் தவிசாளர் கெப் ரக வாகனத்தில், நேபட பகுதியிலிருந்து கோவின்ன பகுதி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, முன்னால் வந்த டிப்பர் பின்புற பக்கவாட்டில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் தவிசாளர் பயணித்த கெப் வாகனத்திற்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் கெப் வாகனத்தை பிரதேச சபையின் தவிசாளர் செலுத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தவிசாளர் பயணித்த வாகனத்தை மோதிய டிப்பர் தொடங்கொட பிரதேச சபைத் தவிசாளர் பயணித்த வாகனம் இன்று (02) காலை 9 மணியளவில் விபத்திற்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடங்கொட பிரதேசசபைத் தவிசாளர் கெப் ரக வாகனத்தில், நேபட பகுதியிலிருந்து கோவின்ன பகுதி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, முன்னால் வந்த டிப்பர் பின்புற பக்கவாட்டில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் தவிசாளர் பயணித்த கெப் வாகனத்திற்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் கெப் வாகனத்தை பிரதேச சபையின் தவிசாளர் செலுத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.