• Aug 02 2025

கடும் மழையுடன் மின்னல் தாக்கம்; பல மாகாணங்களுக்கு மீண்டும் எச்சரிக்கை

Chithra / Aug 2nd 2025, 2:07 pm
image


வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இந்த அறிவிப்பு இன்று இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

அத்துடன், இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

 


கடும் மழையுடன் மின்னல் தாக்கம்; பல மாகாணங்களுக்கு மீண்டும் எச்சரிக்கை வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பு இன்று இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement