• May 15 2025

கேள்விக் குறியாகியுள்ள அர்ச்சுனாவின் MP பதவி? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

Sharmi / May 14th 2025, 1:42 pm
image

யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த பொதுத் தேர்தலின் போது அரச வைத்தியராகக் கடமையாற்றிய நிலையில், வேட்பு மனுவை சமர்ப்பித்ததாகவும் அரச சேவையிலிருந்து விலகாமல் இவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்வது சட்டவிரோதமானது இதன்படி, அரசியல் சாசனத்தின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனப் பிரகடனப்படுத்தி, அந்த ஆசனத்தை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி மனுதாரர் புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இவ்வாறு தாக்கல் செய்த மனு இன்று(14) நீதியரசர்களான மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது குறித்த மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்த, அதனை எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



கேள்விக் குறியாகியுள்ள அர்ச்சுனாவின் MP பதவி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு. யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த பொதுத் தேர்தலின் போது அரச வைத்தியராகக் கடமையாற்றிய நிலையில், வேட்பு மனுவை சமர்ப்பித்ததாகவும் அரச சேவையிலிருந்து விலகாமல் இவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்வது சட்டவிரோதமானது இதன்படி, அரசியல் சாசனத்தின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனப் பிரகடனப்படுத்தி, அந்த ஆசனத்தை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி மனுதாரர் புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.இவ்வாறு தாக்கல் செய்த மனு இன்று(14) நீதியரசர்களான மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்த, அதனை எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement