• Aug 16 2025

இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளுக்கு எதிராக ;பலஸ்தீனுக்காக ஒன்றினையும் இலங்கையர் எனும் அமைப்பினால் போராட்டம் முன்னெடுப்பு

Thansita / Aug 16th 2025, 9:06 am
image

பலஸ்தீனுக்காக ஒன்றினையும் இலங்கையர் எனும் அமைப்பினால் நேற்றையதினம் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும் பலஸ்தீன், ஹாஸா மக்களின் உயிர் பாதுகாப்புக்காகவும் அவர்களுக்கு ஆதரவு வேண்டியும் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று இடம் பெற்றது.

பெருமளவான முஸ்லிம், தமிழ், பௌத்த மற்றும் கத்தோலிக்க மக்கள் ஒன்றினைந்து பொரளை கனத்தைக்கு முன்பாகவுள்ள சுற்று வட்டத்தில் இருந்து பொரளை கெம்பல் மைதானம் வரை சுதந்திர பலஸ்தீனத்திற்காகவும், இஸ்ரேலின் கொலைகளுக்கு எதிராகவும், யுத்தத்தை நிறுத்தி பலஸ்தீன் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் வேண்டிய வாசகங்களுடன் சுலோகங்கள் மற்றும் பெனர்களை ஏந்தி மக்கள் பேரணியாகச் சென்று கெம்பல் மைதானத்தில் கண்டனக் கூட்டத்தையும் நடத்தினர்.  

 இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டு அமைப்பின் பிரதித் தலைவர் அமீன் இஸதீன் வரவேற்புரையை வழங்கினார்


அதனைத் தொடர்ந்து பிரதி சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி ஸாலி, வேக்கண்டவெல ராகுல தேரர், பாராளுமன்ற உறுப்பினரும் பலஸ்தீன் பாராளுமன்ற நற்புறவுச் சங்கத்தின் பிரதித் தலைவருமான டொக்டர் நாஜித் இண்டிக, சோசலிச இளைஞர் அமைப்பின் செயலாளர் அஞ்ஜன சம்பத், பிறீ பலஸ்தீன் இயக்கத்தின் உறுப்பினர் திருமதி மெலானி குணதிலக, மக்கள் போராட்ட குழுவின் சட்டத்தரணி சுவாஸ்திகா அருணலிங்கம், புரொண்ட் லைன் சோசலிக கட்சியின் நுவான்போப்கே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 இஸ்ரேல் பலஸ்தீனில் மேற்கொண்டு வரும் அராஜகங்கள் மற்றும் அப்பாவிகளை படுகொலை செய்தல், மக்கள் குடிமனைகள், வைத்தியசாலைகள், அகதி முகாம்கள் மீதும் குண்டுபோட்டு மக்களை கொன்று குவித்து வருவதற்கு எதிராகவும் அவர்களை கண்டித்தும், துன்பப்படும் பலஸ்தீன், ஹாஸா மக்களுக்கு ஆதரவாகவும் காரசாரமான கருத்துக்களை முன்வைத்து பேசினர்,


 அநியாயக் கொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மேற்படி பேரணிக் கூட்டத்தில் பிரதி பிரதி சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி ஸாலி, பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்,  பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நாஜித் இண்டிக அரச தனியார் ஊழியர்கள், மதத் தலைவர்கள், பல் துறை சார்ந்த புத்தி ஜீவிகள், பெண்கள், குழந்தைகள் என பெருந்திரலானவர்கள் இனமத பேதமின்றி கலந்து கொண்டிருந்தனர்.


இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளுக்கு எதிராக ;பலஸ்தீனுக்காக ஒன்றினையும் இலங்கையர் எனும் அமைப்பினால் போராட்டம் முன்னெடுப்பு பலஸ்தீனுக்காக ஒன்றினையும் இலங்கையர் எனும் அமைப்பினால் நேற்றையதினம் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும் பலஸ்தீன், ஹாஸா மக்களின் உயிர் பாதுகாப்புக்காகவும் அவர்களுக்கு ஆதரவு வேண்டியும் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று இடம் பெற்றது.பெருமளவான முஸ்லிம், தமிழ், பௌத்த மற்றும் கத்தோலிக்க மக்கள் ஒன்றினைந்து பொரளை கனத்தைக்கு முன்பாகவுள்ள சுற்று வட்டத்தில் இருந்து பொரளை கெம்பல் மைதானம் வரை சுதந்திர பலஸ்தீனத்திற்காகவும், இஸ்ரேலின் கொலைகளுக்கு எதிராகவும், யுத்தத்தை நிறுத்தி பலஸ்தீன் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் வேண்டிய வாசகங்களுடன் சுலோகங்கள் மற்றும் பெனர்களை ஏந்தி மக்கள் பேரணியாகச் சென்று கெம்பல் மைதானத்தில் கண்டனக் கூட்டத்தையும் நடத்தினர்.   இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டு அமைப்பின் பிரதித் தலைவர் அமீன் இஸதீன் வரவேற்புரையை வழங்கினார்அதனைத் தொடர்ந்து பிரதி சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி ஸாலி, வேக்கண்டவெல ராகுல தேரர், பாராளுமன்ற உறுப்பினரும் பலஸ்தீன் பாராளுமன்ற நற்புறவுச் சங்கத்தின் பிரதித் தலைவருமான டொக்டர் நாஜித் இண்டிக, சோசலிச இளைஞர் அமைப்பின் செயலாளர் அஞ்ஜன சம்பத், பிறீ பலஸ்தீன் இயக்கத்தின் உறுப்பினர் திருமதி மெலானி குணதிலக, மக்கள் போராட்ட குழுவின் சட்டத்தரணி சுவாஸ்திகா அருணலிங்கம், புரொண்ட் லைன் சோசலிக கட்சியின் நுவான்போப்கே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இஸ்ரேல் பலஸ்தீனில் மேற்கொண்டு வரும் அராஜகங்கள் மற்றும் அப்பாவிகளை படுகொலை செய்தல், மக்கள் குடிமனைகள், வைத்தியசாலைகள், அகதி முகாம்கள் மீதும் குண்டுபோட்டு மக்களை கொன்று குவித்து வருவதற்கு எதிராகவும் அவர்களை கண்டித்தும், துன்பப்படும் பலஸ்தீன், ஹாஸா மக்களுக்கு ஆதரவாகவும் காரசாரமான கருத்துக்களை முன்வைத்து பேசினர், அநியாயக் கொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மேற்படி பேரணிக் கூட்டத்தில் பிரதி பிரதி சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி ஸாலி, பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்,  பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நாஜித் இண்டிக அரச தனியார் ஊழியர்கள், மதத் தலைவர்கள், பல் துறை சார்ந்த புத்தி ஜீவிகள், பெண்கள், குழந்தைகள் என பெருந்திரலானவர்கள் இனமத பேதமின்றி கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement