• May 01 2025

அடுத்த 36 மணி நேரத்தில் எதுவும் நடக்கலாம்..! அணு ஆயுதங்களோடு தயார் நிலையில் பாகிஸ்தான்..!

Sharmi / Apr 30th 2025, 3:43 pm
image

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22 ஆந் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, இந்த சூழலில், அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை தொடங்கும் என பாகிஸ்தான் அரசை அந்நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் மந்திரி அட்டாவுல்லா தரார் கூறுகையில், "பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தயாராகி வருகிறது.

ஏற்கனவே பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக இருந்து வருகிறது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் பாகிஸ்தான் எப்போதும் கண்டித்து வருகிறது.

பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணை குழுக்கள் மூலம் நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணையை நடத்த பாகிஸ்தான் முன்வந்தது. ஆனால் இந்தியா விசாரணையைத் தவிர்த்து மோதல் பாதையை தேர்ந்தெடுத்தது.

இந்தியாவின் எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் உறுதியாகவும், தீர்க்கமாகவும் பதிலளிக்கப்படும். இதனால் ஏற்படும் விளைவுகளின் பொறுப்பு இந்தியாவையே சேரும்" என்று தெரிவித்தார். மேலும் தனது நாடு மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், ஆனால் “நமது இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல் இருந்தால்” மட்டுமே அதன் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "எதிரிக்கு பதிலடி தர, இலக்குகளை தீர்மானிக்கும் முழு சுதந்திரம் ராணுவத்திற்கு உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக மரண அடி கொடுக்க வேண்டியது நமது நாட்டின் உறுதிப்பாடு" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த 36 மணி நேரத்தில் எதுவும் நடக்கலாம். அணு ஆயுதங்களோடு தயார் நிலையில் பாகிஸ்தான். காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22 ஆந் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அதன்படி, இந்த சூழலில், அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை தொடங்கும் என பாகிஸ்தான் அரசை அந்நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் மந்திரி அட்டாவுல்லா தரார் கூறுகையில், "பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தயாராகி வருகிறது.ஏற்கனவே பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக இருந்து வருகிறது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் பாகிஸ்தான் எப்போதும் கண்டித்து வருகிறது.பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணை குழுக்கள் மூலம் நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணையை நடத்த பாகிஸ்தான் முன்வந்தது. ஆனால் இந்தியா விசாரணையைத் தவிர்த்து மோதல் பாதையை தேர்ந்தெடுத்தது.இந்தியாவின் எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் உறுதியாகவும், தீர்க்கமாகவும் பதிலளிக்கப்படும். இதனால் ஏற்படும் விளைவுகளின் பொறுப்பு இந்தியாவையே சேரும்" என்று தெரிவித்தார். மேலும் தனது நாடு மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், ஆனால் “நமது இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல் இருந்தால்” மட்டுமே அதன் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "எதிரிக்கு பதிலடி தர, இலக்குகளை தீர்மானிக்கும் முழு சுதந்திரம் ராணுவத்திற்கு உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக மரண அடி கொடுக்க வேண்டியது நமது நாட்டின் உறுதிப்பாடு" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement