அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்ததில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெராயா ஊவாகலை தோட்டத்தின் மேல் பிரிவில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சாரதி மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மூன்று இளைஞர்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் லிந்துலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் ஒருவர் முதுகுத் தண்டு பாதிப்பு காரணமாக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிக மதுபோதையில் இருந்த சாரதி உட்பட அவரது மூன்று நண்பர்களும் தோட்டத்திலிருந்து லிந்துலைவில் உள்ள மெராயா நகரத்திற்கு அதிவேகமாக சென்றபோது, முச்சக்கர வண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகிச் சென்று விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்ததில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெராயா ஊவாகலை தோட்டத்தின் மேல் பிரிவில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சாரதி மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மூன்று இளைஞர்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் லிந்துலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.காயமடைந்தவர்களில் ஒருவர் முதுகுத் தண்டு பாதிப்பு காரணமாக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அதிக மதுபோதையில் இருந்த சாரதி உட்பட அவரது மூன்று நண்பர்களும் தோட்டத்திலிருந்து லிந்துலைவில் உள்ள மெராயா நகரத்திற்கு அதிவேகமாக சென்றபோது, முச்சக்கர வண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகிச் சென்று விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்