ஹட்டன் கல்வித் திணைக்கள கோட்டத்திற்குட்பட்ட கங்கேவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு 2 லட்சம் ரூபா செலவில் வகுப்பறை ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வித்தியாலயத்தில் வகுப்பறை பற்றாக்குறை காணப்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்யும் முகமாக வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வித்தியாலயத்தில் தரம் ஆறில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 18 அடி அகலம் 36 அடி நீளம் கொண்ட வகுப்பறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் வேண்டுகோளுக்கு இணங்க மாணவர்களது பெற்றோர், 320/எண் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள பிரஜா சக்தி பொலிஸ் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார, குருநாகல பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி ஆகியோர் இணைந்து வகுப்பறையை அமைத்துக்கொடுத்துள்ளனர்.
புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத்தின் கட்டுமாணப் பணி நிறைவு பெற்று மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக மாணவர்களுக்கு வகுப்பறை கையளிக்கப்பட்டது.
கங்கேவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு 2 லட்சம் ரூபா செலவில் வகுப்பறை ஹட்டன் கல்வித் திணைக்கள கோட்டத்திற்குட்பட்ட கங்கேவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு 2 லட்சம் ரூபா செலவில் வகுப்பறை ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த வித்தியாலயத்தில் வகுப்பறை பற்றாக்குறை காணப்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்யும் முகமாக வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வித்தியாலயத்தில் தரம் ஆறில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 18 அடி அகலம் 36 அடி நீளம் கொண்ட வகுப்பறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் வேண்டுகோளுக்கு இணங்க மாணவர்களது பெற்றோர், 320/எண் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள பிரஜா சக்தி பொலிஸ் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார, குருநாகல பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி ஆகியோர் இணைந்து வகுப்பறையை அமைத்துக்கொடுத்துள்ளனர். புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத்தின் கட்டுமாணப் பணி நிறைவு பெற்று மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக மாணவர்களுக்கு வகுப்பறை கையளிக்கப்பட்டது.