கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் கடந்த திங்கட்கிழமையில் இருந்து தொடர்ச்சியாக கல்முனை மற்றும் இறக்காமம் பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், உணவு மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
சுகாதார விதிமுறைகளை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பழுதடைந்த உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
பாவிக்க முடியாத, சேதமடைந்த உணவு தாயாரிக்கும் பாத்திரங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
]]]]]]]
கல்முனை மற்றும் இறக்காமம் பிரதேச உணவகங்களில் திடீர் சோதனை கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.அதற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் கடந்த திங்கட்கிழமையில் இருந்து தொடர்ச்சியாக கல்முனை மற்றும் இறக்காமம் பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டன.பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், உணவு மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.சுகாதார விதிமுறைகளை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பழுதடைந்த உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. பாவிக்க முடியாத, சேதமடைந்த உணவு தாயாரிக்கும் பாத்திரங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.]]]]]]]