• Jul 31 2025

மக்களைக் கவர்ந்த காணொளிகள்; 400 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் பெற்ற முதல் நபரானார் MrBeast!

shanuja / Jul 30th 2025, 1:23 pm
image

யூடியூபில் 400 மில்லியன் சந்தாதாரர்கள் (subscribers) பெற்ற முதல் நபராக MrBeast தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

 

அவர் யூடியூபில் மக்களைக் கவரும் வகையில் காணொளிகளை வெளியிட்டு வந்த நிலையில் அதிக சந்தாதாரர்களைப் பெற்ற நபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


இது யூடியூப்  தளத்தில் வேறு எந்த உள்ளடக்க படைப்பாளரும் கூட நெருங்காத ஒரு மைல்கல் ஆகும். 


MrBeast 2012 இல் தனது YouTube பயணத்தைத் தொடங்கினார். கேமிங் வீடியோக்களை  பதிவு செய்து  பல்வேறு உள்ளடக்க வடிவங்களை முயற்சித்தார்.


2017 இல் ஒரு வீடியோ பதிவு அவரது திருப்புமுனையாக அமைந்தது, அதில் அவர் 100,000 சப்ஸ்கிரைப்பர்ஸைப் பெற்றார். இது அவரது முதல்  வெற்றிக்கு வழிவகுத்தது. 


அப்போதிருந்து, MrBeast கார்கள் முதல் பணம் வரையிலான மிகைப்படுத்தப்பட்ட சவால்கள் மற்றும் பாரிய பரிசுகளுக்கு பெயர் பெற்றிருந்தார். இவை அனைத்தும் அவர் நம்பமுடியாத வேகத்தில் வளர உதவியது.


2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், YouTube ஆளுமை அந்த நேரத்தில் முதலிடத்தில் இருந்த T-Series ஐ  மிஞ்ச விரும்புவதாக தெளிவுபடுத்தினார்.


அப்போது, MrBeast சுமார் 125 மில்லியன் சப்ஸ்கிரைப்பர்ஸை பெற்றிருந்தார். அதே நேரத்தில் T-Series ஏற்கனவே 230 மில்லியனைத் தாண்டியிருந்தது.


2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், அந்த இடைவெளி குறைந்து, MrBeast அதிகாரபூர்வமாக தளத்தில் அதிக சந்தாதாரர்களைப் பெற்ற YouTuber  ஆக விளங்கினார். 


தற்போது அவர் 400 மில்லியன் சப்ஸ்கிரைப்பர்ஸைப் பெற்று அதிகமான சப்ஸ்கிரைப்பர்ஸைப் பெற்ற முதல்  நபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

 

அவருக்குப் பிரத்தியேக பிலே பட்டன் (play button) வழங்கி யூடியூபின் முகாமையாளர் நீல் மோகன் கௌரவித்தார்.

மக்களைக் கவர்ந்த காணொளிகள்; 400 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் பெற்ற முதல் நபரானார் MrBeast யூடியூபில் 400 மில்லியன் சந்தாதாரர்கள் (subscribers) பெற்ற முதல் நபராக MrBeast தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  அவர் யூடியூபில் மக்களைக் கவரும் வகையில் காணொளிகளை வெளியிட்டு வந்த நிலையில் அதிக சந்தாதாரர்களைப் பெற்ற நபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது யூடியூப்  தளத்தில் வேறு எந்த உள்ளடக்க படைப்பாளரும் கூட நெருங்காத ஒரு மைல்கல் ஆகும். MrBeast 2012 இல் தனது YouTube பயணத்தைத் தொடங்கினார். கேமிங் வீடியோக்களை  பதிவு செய்து  பல்வேறு உள்ளடக்க வடிவங்களை முயற்சித்தார்.2017 இல் ஒரு வீடியோ பதிவு அவரது திருப்புமுனையாக அமைந்தது, அதில் அவர் 100,000 சப்ஸ்கிரைப்பர்ஸைப் பெற்றார். இது அவரது முதல்  வெற்றிக்கு வழிவகுத்தது. அப்போதிருந்து, MrBeast கார்கள் முதல் பணம் வரையிலான மிகைப்படுத்தப்பட்ட சவால்கள் மற்றும் பாரிய பரிசுகளுக்கு பெயர் பெற்றிருந்தார். இவை அனைத்தும் அவர் நம்பமுடியாத வேகத்தில் வளர உதவியது.2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், YouTube ஆளுமை அந்த நேரத்தில் முதலிடத்தில் இருந்த T-Series ஐ  மிஞ்ச விரும்புவதாக தெளிவுபடுத்தினார்.அப்போது, MrBeast சுமார் 125 மில்லியன் சப்ஸ்கிரைப்பர்ஸை பெற்றிருந்தார். அதே நேரத்தில் T-Series ஏற்கனவே 230 மில்லியனைத் தாண்டியிருந்தது.2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், அந்த இடைவெளி குறைந்து, MrBeast அதிகாரபூர்வமாக தளத்தில் அதிக சந்தாதாரர்களைப் பெற்ற YouTuber  ஆக விளங்கினார். தற்போது அவர் 400 மில்லியன் சப்ஸ்கிரைப்பர்ஸைப் பெற்று அதிகமான சப்ஸ்கிரைப்பர்ஸைப் பெற்ற முதல்  நபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  அவருக்குப் பிரத்தியேக பிலே பட்டன் (play button) வழங்கி யூடியூபின் முகாமையாளர் நீல் மோகன் கௌரவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement