• Apr 30 2025

சட்ட வல்லுனராவதே எனது கனவு; வணிக துறையில் யாழில் முதலிடம் பெற்ற மாணவன் தெரிவிப்பு

Chithra / Apr 30th 2025, 3:38 pm
image



2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில்  வணிகத்துறையில் தோற்றி யாழ்ப்பாணம் மாவட்ட ரீதியாக விஜயசுந்தரம் வாரணன் முதலிடம் பெற்றுள்ளார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தனது உயர் கல்வியை கற்றார்.

கணக்கீடு, பொருளியல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய அனைத்து பாடங்களில் ஏ சித்திகளை பெற்றுள்ளார்.

அவர் ஊடகங்களுக்குகருத்து தெரிவிக்கையில்,

க.பொ.த உயர்தரம் கற்கும் போது நான் பல சவால்களை எதிர்நோக்கினேன். அந்த சவால்கள் அனைத்தையும் எனவு பெற்றோரே நிவர்த்தி செய்தனர். இதானால் பெற்றோருக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனிவரும் பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள தம்பி தங்கைகளுக்கு நான் கூற முனைவதா யாதெனில், நீங்கள் விரும்பி வர்த்தக துறையை தெரிவு செய்யுங்கள், அதில் கடுமையாக முயற்சி எடுங்கள். 

உயர்தரத்தில் கற்கும் இரண்டு வருட கல்விதான் வாழைக்கையை தீர்மானிக்க போகின்றது என விளங்கி படியுங்கள். அப்போது வெற்றி கிட்டும். 

சட்ட வல்லுனர் ஆவதே எனது கனவாக உள்ளது. அதற்கு ஏற்ப எனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளேன் என்றார்.

சட்ட வல்லுனராவதே எனது கனவு; வணிக துறையில் யாழில் முதலிடம் பெற்ற மாணவன் தெரிவிப்பு 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில்  வணிகத்துறையில் தோற்றி யாழ்ப்பாணம் மாவட்ட ரீதியாக விஜயசுந்தரம் வாரணன் முதலிடம் பெற்றுள்ளார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தனது உயர் கல்வியை கற்றார்.கணக்கீடு, பொருளியல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய அனைத்து பாடங்களில் ஏ சித்திகளை பெற்றுள்ளார்.அவர் ஊடகங்களுக்குகருத்து தெரிவிக்கையில்,க.பொ.த உயர்தரம் கற்கும் போது நான் பல சவால்களை எதிர்நோக்கினேன். அந்த சவால்கள் அனைத்தையும் எனவு பெற்றோரே நிவர்த்தி செய்தனர். இதானால் பெற்றோருக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இனிவரும் பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள தம்பி தங்கைகளுக்கு நான் கூற முனைவதா யாதெனில், நீங்கள் விரும்பி வர்த்தக துறையை தெரிவு செய்யுங்கள், அதில் கடுமையாக முயற்சி எடுங்கள். உயர்தரத்தில் கற்கும் இரண்டு வருட கல்விதான் வாழைக்கையை தீர்மானிக்க போகின்றது என விளங்கி படியுங்கள். அப்போது வெற்றி கிட்டும். சட்ட வல்லுனர் ஆவதே எனது கனவாக உள்ளது. அதற்கு ஏற்ப எனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement