• May 29 2025

கிளிநொச்சியிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளும் தேசிய மக்கள் சக்திக்கே..! அமைச்சர் நம்பிக்கை

Chithra / Apr 18th 2025, 3:23 pm
image


தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி நகர கட்சி அலுவலகம் கடல் தொழில் அமைச்சர் சந்திரசேகரத்தால் இன்றைய தினம்  திறந்து வைக்கப்பட்டது. 

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் 

கடந்த காலத்தில் அசுத்தப்படுத்திய அரசியல் கலாசாரத்தை இந்த மக்கள் சுத்தப்படுத்தியிருக்கிறார்கள்.

அதுபோல கீழ் மட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளையும் சுத்தப்படுத்த வேண்டும்.

இலஞ்ச ஊழல் மோசடி இல்லாத வரலாறு புதியதொரு ஆட்சி மூலம் வந்துள்ளது. தேசியம் தேசியம் என்று மக்களின் இரத்தத்தை சூடேற்றி அதில் குளிர்காய்ந்தார்கள். அதனை இன்றும் செய்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து சபைகளையும் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு கையளிக்கவுள்ளனர் என தெரிவித்தார். 


கிளிநொச்சியிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளும் தேசிய மக்கள் சக்திக்கே. அமைச்சர் நம்பிக்கை தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி நகர கட்சி அலுவலகம் கடல் தொழில் அமைச்சர் சந்திரசேகரத்தால் இன்றைய தினம்  திறந்து வைக்கப்பட்டது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த காலத்தில் அசுத்தப்படுத்திய அரசியல் கலாசாரத்தை இந்த மக்கள் சுத்தப்படுத்தியிருக்கிறார்கள்.அதுபோல கீழ் மட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளையும் சுத்தப்படுத்த வேண்டும்.இலஞ்ச ஊழல் மோசடி இல்லாத வரலாறு புதியதொரு ஆட்சி மூலம் வந்துள்ளது. தேசியம் தேசியம் என்று மக்களின் இரத்தத்தை சூடேற்றி அதில் குளிர்காய்ந்தார்கள். அதனை இன்றும் செய்கின்றனர்.கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து சபைகளையும் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு கையளிக்கவுள்ளனர் என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now