இலங்கையின் தேயிலைத் துறை உற்பத்தியை அதிகரிப்பதற்கு, முழு ஒத்துழைப்பை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.
இதன்படி, வெளிநாடுகளின் தேயிலைத் தோட்டங்களில் மேற்கொள்ளப்படும், சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத பூச்சி கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்களை, இலங்கை போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்துவதாக சீனாவின் குய்சோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜாங் லிபோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
இலங்கையைப் பொறுத்தவரையில், இந்த முறைகளை இயல்பாகவே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனூடாக தேயிலையின் உற்பத்தி மற்றும் தரம் என்பனவும் மேம்படும்.
தேயிலை ஒரு முக்கிய பணப் பயிராக உள்ள இலங்கையில் இந்த கூட்டு முயற்சி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் அதிக தேயிலையை உற்பத்தி செய்யும் முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது . சீனாவின் குய்சோவை போன்றே இலங்கையிலும் மலைப்பகுதிகளில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது.
இந்த நிலையில், தங்களின் தொழில்நுட்ப உதவிகள் தேயிலைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உதவுகின்றது.
அத்துடன், தேயிலைத் தோட்டங்களில் விளைச்சலும் கணிசமாக அதிகரித்துள்ளது என்று குய்சோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
தேயிலைத் துறை உற்பத்தி அதிகரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கும் சீனா இலங்கையின் தேயிலைத் துறை உற்பத்தியை அதிகரிப்பதற்கு, முழு ஒத்துழைப்பை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. இதன்படி, வெளிநாடுகளின் தேயிலைத் தோட்டங்களில் மேற்கொள்ளப்படும், சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத பூச்சி கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்களை, இலங்கை போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்துவதாக சீனாவின் குய்சோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜாங் லிபோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,இலங்கையைப் பொறுத்தவரையில், இந்த முறைகளை இயல்பாகவே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனூடாக தேயிலையின் உற்பத்தி மற்றும் தரம் என்பனவும் மேம்படும். தேயிலை ஒரு முக்கிய பணப் பயிராக உள்ள இலங்கையில் இந்த கூட்டு முயற்சி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் அதிக தேயிலையை உற்பத்தி செய்யும் முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது . சீனாவின் குய்சோவை போன்றே இலங்கையிலும் மலைப்பகுதிகளில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த நிலையில், தங்களின் தொழில்நுட்ப உதவிகள் தேயிலைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உதவுகின்றது. அத்துடன், தேயிலைத் தோட்டங்களில் விளைச்சலும் கணிசமாக அதிகரித்துள்ளது என்று குய்சோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.