• Jul 31 2025

கடலோரப் பகுதியில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு வருடாந்த அபராதம்

Chithra / Jul 30th 2025, 2:07 pm
image

 

கடலோரப் பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு வருடாந்த அபராதம் விதிக்க சட்ட விதிகளை அறிமுகப்படுத்த கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இத்தகைய கட்டுமானங்களுக்கு வருடாந்த அனுமதி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் டர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.

இருப்பினும், கடற்கரையிலேயே நேரடியாக அமைந்துள்ள சட்டவிரோத கட்டடங்கள் தற்போது அகற்றப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

 பாதுகாக்கப்பட்ட கடற்கரை வலயத்திற்குள் உள்ள அங்கீகரிக்கப்படாத சில கட்டடங்களை அகற்றுவதன் மூலம் கடலோரப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அதனை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.

கடலோரப் பகுதியில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு வருடாந்த அபராதம்  கடலோரப் பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு வருடாந்த அபராதம் விதிக்க சட்ட விதிகளை அறிமுகப்படுத்த கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் தீர்மானித்துள்ளது.இத்தகைய கட்டுமானங்களுக்கு வருடாந்த அனுமதி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் டர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.இருப்பினும், கடற்கரையிலேயே நேரடியாக அமைந்துள்ள சட்டவிரோத கட்டடங்கள் தற்போது அகற்றப்பட்டு வருவதாக அவர் கூறினார். பாதுகாக்கப்பட்ட கடற்கரை வலயத்திற்குள் உள்ள அங்கீகரிக்கப்படாத சில கட்டடங்களை அகற்றுவதன் மூலம் கடலோரப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அதனை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement