செல்வநாயகபுரம் பொது மருத்துவமனையில் உள்ள தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (28)மாவட்ட செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. இதன் போது தனது பிரேரணையை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
செல்வநாயகபுரம் பொது மருத்துவமனையானது ‘சி’தர ( Type C) பிரதேச மருத்துவமனையாகும் . இம்மருத்துவமனை 65,000 மக்களுக்கு சேவையாற்றுகின்றது .
தாதியர் இன்மையால் இம்மருத்துவமனை முறையாக செயற்படமுடியாமல் உள்ளது.எனவே, இம்மருத்துவமனைக்கு குறைந்தது 03 தாதியரையாவது நியமிக்க ஆவன செய்ய வேண்டும்.
திரியாய் தொடக்க மருத்துவமனைக்கு மிக நீண்ட காலமாக மருத்துவரும்,சிற்றூழியர்களும் இல்லாத நிலை காணப்படுகின்றது. இவர்களை நியமித்து இந்த மருத்துவமனை முறையாக செயற்பட ஆவன செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
செல்வநாயகபுரம் பொது மருத்துவமனையில் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்க - குகதாசன் எம்.பி கோரிக்கை செல்வநாயகபுரம் பொது மருத்துவமனையில் உள்ள தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (28)மாவட்ட செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. இதன் போது தனது பிரேரணையை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், செல்வநாயகபுரம் பொது மருத்துவமனையானது ‘சி’தர ( Type C) பிரதேச மருத்துவமனையாகும் . இம்மருத்துவமனை 65,000 மக்களுக்கு சேவையாற்றுகின்றது . தாதியர் இன்மையால் இம்மருத்துவமனை முறையாக செயற்படமுடியாமல் உள்ளது.எனவே, இம்மருத்துவமனைக்கு குறைந்தது 03 தாதியரையாவது நியமிக்க ஆவன செய்ய வேண்டும். திரியாய் தொடக்க மருத்துவமனைக்கு மிக நீண்ட காலமாக மருத்துவரும்,சிற்றூழியர்களும் இல்லாத நிலை காணப்படுகின்றது. இவர்களை நியமித்து இந்த மருத்துவமனை முறையாக செயற்பட ஆவன செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.