விசா முடிந்தும் நாட்டில் தங்கியிருந்த 219 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, விசா முடிந்தும் நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்யவும் அவர்களின் கடவுச்சீட்டுக்களை பெறுவதற்காக தவறான தகவல்கள் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்த நபர்கள் தொடர்பாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை துப்பாக்கிகளைப் பயன்படுத்தி கொலை செய்த 241 பேர், கொலை முயற்சி மற்றும் காயப்படுத்தலுக்காக 180 பேர் மற்றும் விலங்குகளைக் கொன்றதற்காக 04 பேர் உட்பட 425 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விசா முடிந்தும் நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை விசா முடிந்தும் நாட்டில் தங்கியிருந்த 219 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.அதன்படி, விசா முடிந்தும் நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்யவும் அவர்களின் கடவுச்சீட்டுக்களை பெறுவதற்காக தவறான தகவல்கள் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்த நபர்கள் தொடர்பாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் 23 வியட்நாமியர்கள், 02 பாகிஸ்தானியர்கள், 106 வங்கதேசத்தினர், 56 இந்தியர்கள், 04 சீனர்கள், 06 தாய்லாந்து நாட்டினர், 02 பிலிப்பைன்ஸ் நாட்டினர், 02 புருண்டி நாட்டினர், 01 எத்தியோப்பியர், 02 கென்யர்கள், 01 உகாண்டா நாட்டினர், 01 நேபாள நாட்டினர், 03 ரஷ்யர்கள், 01 டச்சுக்காரர்கள், 02 யேமன் நாட்டினர், 04 இஸ்ரேலியர்கள், 01 ஆஸ்திரேலியர்கள், 01 இத்தாலியர்கள் மற்றும் 01 சூடானியர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை துப்பாக்கிகளைப் பயன்படுத்தி கொலை செய்த 241 பேர், கொலை முயற்சி மற்றும் காயப்படுத்தலுக்காக 180 பேர் மற்றும் விலங்குகளைக் கொன்றதற்காக 04 பேர் உட்பட 425 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.