ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பு மின்சார சபைக்குச் சொந்தமான மின்கம்பம் ஒன்று சரிந்து விழுந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏ-9 வீதி ஆனையிறவு உப்பளத்தின் முன் பக்கம் உள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பம் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
மின் இணைப்பினை கொண்ட பெரிய மின்கம்பமானது கடந்த காலத்தில் ஏற்பட்ட காற்றின் தாக்கத்தினால் கிட்டத்தட்ட 80 வீதம் முறிந்த வண்ணம் காணப்படுகிறது.
முறிந்த மின் கம்பமானது இருபுறமும் உள்ள மின்கம்பத்தின் இணைப்பின் பலத்திலே கீழே விழாமல் உள்ளது. ஆனால் தற்போது காற்றின் தாக்கம் அதிக அளவு ஏற்பட்டால் மின்கம்பம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளது.
இது மட்டுமன்றி A-9 வீதியில் பாரியளவு வீதி விபத்துக்கள் ஏற்படும் அபாயத்திலும் உள்ளது எந்நேரமும் மின்கம்பம் கீழே விழும் அபாயம் உள்ளது.இதனால் அந்தப் பகுதியில் பயணிக்கும் பயணிகள் அச்சத்திலேயே பயணிக்க வேண்டிய நிலைமையில் உள்ளனர்.
இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் இதுவரை ஆனையிறவு உப்பளத்தாலும், இலங்கை மின்சார சபையினாலும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பு சரிந்துள்ள மின்கம்பம் - விபத்து ஏற்படும் அபாயம் ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பு மின்சார சபைக்குச் சொந்தமான மின்கம்பம் ஒன்று சரிந்து விழுந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏ-9 வீதி ஆனையிறவு உப்பளத்தின் முன் பக்கம் உள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பம் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது. மின் இணைப்பினை கொண்ட பெரிய மின்கம்பமானது கடந்த காலத்தில் ஏற்பட்ட காற்றின் தாக்கத்தினால் கிட்டத்தட்ட 80 வீதம் முறிந்த வண்ணம் காணப்படுகிறது. முறிந்த மின் கம்பமானது இருபுறமும் உள்ள மின்கம்பத்தின் இணைப்பின் பலத்திலே கீழே விழாமல் உள்ளது. ஆனால் தற்போது காற்றின் தாக்கம் அதிக அளவு ஏற்பட்டால் மின்கம்பம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளது.இது மட்டுமன்றி A-9 வீதியில் பாரியளவு வீதி விபத்துக்கள் ஏற்படும் அபாயத்திலும் உள்ளது எந்நேரமும் மின்கம்பம் கீழே விழும் அபாயம் உள்ளது.இதனால் அந்தப் பகுதியில் பயணிக்கும் பயணிகள் அச்சத்திலேயே பயணிக்க வேண்டிய நிலைமையில் உள்ளனர்.இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் இதுவரை ஆனையிறவு உப்பளத்தாலும், இலங்கை மின்சார சபையினாலும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.