இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை வருகின்ற 13ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டமும் 15ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டமும் 19ஆம் திகதி ரயில் மறியல் போராட்டமும் நடத்தப் போவதாக மீனவ சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்களை நேற்று இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு விசைப்படகு மற்றும் ஏழு மீனவர்களை கைது செய்தது.
மீனவர்களின் கைது நடவடிக்கை காரணமாக ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இன்று காலை அனைத்து விசைப்படகு மீனவ சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது இத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த விசைப்படகு நாட்டு படகுகளை இலங்கை கடற்படை கைது செய்து மீனவர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் என சிறை தண்டனை விதிக்கிறது.
இலங்கை சிறையில் வாடி வரும் 24 மீனவர்களையும் நல்ல நிலையில் உள்ள படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும், நீண்ட காலமாக இருந்து வரும் இந்திய இலங்கை மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும் மற்றும் பாரம்பரிய கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டம் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை வருகின்ற 13ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டமும் 15ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டமும் 19ஆம் திகதி ரயில் மறியல் போராட்டமும் நடத்தப் போவதாக மீனவ சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்களை நேற்று இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு விசைப்படகு மற்றும் ஏழு மீனவர்களை கைது செய்தது.மீனவர்களின் கைது நடவடிக்கை காரணமாக ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இன்று காலை அனைத்து விசைப்படகு மீனவ சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது இத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த விசைப்படகு நாட்டு படகுகளை இலங்கை கடற்படை கைது செய்து மீனவர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் என சிறை தண்டனை விதிக்கிறது.இலங்கை சிறையில் வாடி வரும் 24 மீனவர்களையும் நல்ல நிலையில் உள்ள படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும், நீண்ட காலமாக இருந்து வரும் இந்திய இலங்கை மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும் மற்றும் பாரம்பரிய கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.