இரத்தினபுரியின் கஹதுடுவ என்ற இடத்தில் 15 வயது சிறுவனை கடத்திய சம்பவம் ஒன்று நேற்றையதினம்(17) இடம்பெற்றுள்ளது.
எனினும், குறித்த சிறுவன் கடத்தப்பட்டதாக கூறப்படும் வெள்ளை வேனில் இருந்து குதித்து தப்பியுள்ளார்.
அதன்படி, கெடன்தொல, புதிய பெலன்வாடிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில், கடத்தப்பட்ட சிறுவர் இருப்பதாக 119 பொலிஸ் அவசரப் பிரிவுக்கு ஒருவர் தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிறுவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.
குடும்பத்தின் ஒரே பிள்ளையான 15 வயது சிறுவனே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
இந்த கடத்தலுக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில்,
சிறுவனைக் கடத்திய குழுவைக் கண்டறிய, கஹதுடுவ பொலிஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சிறுவன்; இரத்தினபுரியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் இரத்தினபுரியின் கஹதுடுவ என்ற இடத்தில் 15 வயது சிறுவனை கடத்திய சம்பவம் ஒன்று நேற்றையதினம்(17) இடம்பெற்றுள்ளது.எனினும், குறித்த சிறுவன் கடத்தப்பட்டதாக கூறப்படும் வெள்ளை வேனில் இருந்து குதித்து தப்பியுள்ளார்.அதன்படி, கெடன்தொல, புதிய பெலன்வாடிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில், கடத்தப்பட்ட சிறுவர் இருப்பதாக 119 பொலிஸ் அவசரப் பிரிவுக்கு ஒருவர் தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிறுவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். குடும்பத்தின் ஒரே பிள்ளையான 15 வயது சிறுவனே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். இந்த கடத்தலுக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில்,சிறுவனைக் கடத்திய குழுவைக் கண்டறிய, கஹதுடுவ பொலிஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.