• Aug 02 2025

சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து 100 நாள் போராட்டம்;கிளிநொச்சியில் இன்று ஆரம்பம்

Chithra / Aug 1st 2025, 1:48 pm
image


சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்துள்ள 100நாள் போராட்டம் கிளிநொச்சியில் இன்று ஆரம்பமானது.  

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்தினை பல்வேறு மட்டங்களில் முன்னெடுத்து வருகின்றது. 

அதன் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ம் திகதி அடையாளப்படுத்தப்பட்ட 100 நாள் செயல்முனைவு என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்குள் மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வினை முன்வைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது. 

அதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி இன்று தொடக்கம்   கார்த்திகை மாதம் எட்டாம்  திகதி வரை தொடர்ச்சியான 100 நாட்களும் சுழற்சி முறையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட உள்ளது.

இதன் முதல்  நாளான இன்று  காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி  மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து 100 நாள் போராட்டம்;கிளிநொச்சியில் இன்று ஆரம்பம் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்துள்ள 100நாள் போராட்டம் கிளிநொச்சியில் இன்று ஆரம்பமானது.  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்தினை பல்வேறு மட்டங்களில் முன்னெடுத்து வருகின்றது. அதன் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ம் திகதி அடையாளப்படுத்தப்பட்ட 100 நாள் செயல்முனைவு என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்குள் மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வினை முன்வைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி இன்று தொடக்கம்   கார்த்திகை மாதம் எட்டாம்  திகதி வரை தொடர்ச்சியான 100 நாட்களும் சுழற்சி முறையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட உள்ளது.இதன் முதல்  நாளான இன்று  காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி  மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement