சைக்கிளில் பயணித்த முதியவர் ஒருவரை மோட்டார் சைக்கிள் மோதித் தள்ளியதில் படுகாயமடைந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று மாலை அராலி சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
அராலி சமுர்த்தி வங்கிக்கு அருகே சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் செந்தமிழ் வீதிக்குள் நுழைவதற்கு வலது பக்கமாகத் திரும்பியுள்ளார்.
அவ்வேளை அதேவழியில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், சைக்கிளில் பயணித்த முதியவரை மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் சைக்கிளில் பயணித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சைக்கிளில் பயணித்த முதியவரை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கிள்; முதியவர் படுகாயம் அராலியில் சம்பவம் சைக்கிளில் பயணித்த முதியவர் ஒருவரை மோட்டார் சைக்கிள் மோதித் தள்ளியதில் படுகாயமடைந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்துச் சம்பவம் இன்று மாலை அராலி சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,அராலி சமுர்த்தி வங்கிக்கு அருகே சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் செந்தமிழ் வீதிக்குள் நுழைவதற்கு வலது பக்கமாகத் திரும்பியுள்ளார். அவ்வேளை அதேவழியில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், சைக்கிளில் பயணித்த முதியவரை மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.விபத்தில் சைக்கிளில் பயணித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.