• Aug 02 2025

ஜி.வி. பிரகாஷுக்கு தேசிய விருது – இரண்டாவது முறை வெற்றி!

Thansita / Aug 2nd 2025, 7:40 am
image

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு, தமிழ்–தெலுங்கு மொழிகளில் உருவான வாத்தி (Vaathi) படத்திற்காக சிறந்த பாடல் இசையமைப்பாளர் விருது, 71வது தேசிய திரைப்பட தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அவரது இரண்டாவது தேசிய விருதாகும்.

ஏற்கனவே ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்காக தேசிய விருது வென்றிருந்தார்.

விருது அறிவுக்குப் பிறகு, ஜி.வி. பிரகாஷ் தனது X தளத்தில், “இரண்டாவது முறையாக ஒரு ஆசீர்வாதம்” எனக் கூறி, வாத்தி படக்குழு, நடிகர் தனுஷ், இயக்குநர் வெங்கி அட்லூரி, தயாரிப்பாளர்கள் நாகவம்சி மற்றும் திரிவிக்ரம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

 மேலும், தனது குடும்பம், இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் நன்றி கூறியுள்ளார்.

ஜி.வி. பிரகாஷுக்கு தேசிய விருது – இரண்டாவது முறை வெற்றி நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு, தமிழ்–தெலுங்கு மொழிகளில் உருவான வாத்தி (Vaathi) படத்திற்காக சிறந்த பாடல் இசையமைப்பாளர் விருது, 71வது தேசிய திரைப்பட தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இது அவரது இரண்டாவது தேசிய விருதாகும். ஏற்கனவே ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்காக தேசிய விருது வென்றிருந்தார்.விருது அறிவுக்குப் பிறகு, ஜி.வி. பிரகாஷ் தனது X தளத்தில், “இரண்டாவது முறையாக ஒரு ஆசீர்வாதம்” எனக் கூறி, வாத்தி படக்குழு, நடிகர் தனுஷ், இயக்குநர் வெங்கி அட்லூரி, தயாரிப்பாளர்கள் நாகவம்சி மற்றும் திரிவிக்ரம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், தனது குடும்பம், இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் நன்றி கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement