• May 14 2026

7 கோடி மாணிக்கக் கற்கள் கொள்ளை! CCTV-யில் சிக்கிய மர்ம நபர் கைது

Aathira / May 13th 2026, 3:54 pm
image

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சி கொள்ளைச் சம்பவத்தில், 7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மாணிக்கக் கற்கள் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 11ஆம் தேதி இரவு மணிக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், வீட்டில் இருந்த வர்த்தகரின் தாய் மற்றும் சகோதரியை கூர்மையான ஆயுதங்களால் மிரட்டி அச்சுறுத்தியுள்ளார்.

இதன்போது சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்கள், 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் 1 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவத்தையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய இரத்தினபுரி காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெரா காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகநபரை அடையாளம் கண்டனர்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். 

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், எம்பிலிப்பிட்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மாணிக்கக் கற்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொள்ளையிடப்பட்ட பணத்தில் 52 ஆயிரம் ரூபா மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 கோடி மாணிக்கக் கற்கள் கொள்ளை CCTV-யில் சிக்கிய மர்ம நபர் கைது இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சி கொள்ளைச் சம்பவத்தில், 7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மாணிக்கக் கற்கள் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 11ஆம் தேதி இரவு மணிக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், வீட்டில் இருந்த வர்த்தகரின் தாய் மற்றும் சகோதரியை கூர்மையான ஆயுதங்களால் மிரட்டி அச்சுறுத்தியுள்ளார்.இதன்போது சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்கள், 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் 1 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டது.சம்பவத்தையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய இரத்தினபுரி காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெரா காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகநபரை அடையாளம் கண்டனர்.அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், எம்பிலிப்பிட்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மாணிக்கக் கற்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கொள்ளையிடப்பட்ட பணத்தில் 52 ஆயிரம் ரூபா மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement