க.பொ.த சாதாரண தர பரீட்சையில் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மகா வித்தியாலய மாணவர்கள் நால்வர் 9 ஏ சித்திகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகிய நிலையில், ஒவ்வொரு பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகளும் அந்தந்தப் பாடசாலை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், உடுத்துறை மகா வித்தியாலய மாணவர்கள் நான்கு பேர் 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
அத்துடன் இரண்டு மாணவர்கள் 8ஏ சித்தி பெற்றுள்ளனர்.
பெறுபேறுகள் வெளிவந்ததையடுத்து வித்தியாலய அதிபர் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த முறை மிக சிறந்த பெறுபேறுகள் அதிகரித்துள்ளன. ஆனாலும் இந்த முறை சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது கவலையை அளிக்கிறது. எதிர்வரும் காலத்தில் 100% சித்தியினை பாடசாலை அடைவதற்கு அனைவரும் பயணிக்க வேண்டும் என்றார்.
உடுத்துறை மகா வித்தியாலயத்தில் 4 9ஏ சித்திகள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மகா வித்தியாலய மாணவர்கள் நால்வர் 9 ஏ சித்திகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகிய நிலையில், ஒவ்வொரு பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகளும் அந்தந்தப் பாடசாலை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில், உடுத்துறை மகா வித்தியாலய மாணவர்கள் நான்கு பேர் 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.அத்துடன் இரண்டு மாணவர்கள் 8ஏ சித்தி பெற்றுள்ளனர். பெறுபேறுகள் வெளிவந்ததையடுத்து வித்தியாலய அதிபர் தெரிவிக்கையில், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த முறை மிக சிறந்த பெறுபேறுகள் அதிகரித்துள்ளன. ஆனாலும் இந்த முறை சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது கவலையை அளிக்கிறது. எதிர்வரும் காலத்தில் 100% சித்தியினை பாடசாலை அடைவதற்கு அனைவரும் பயணிக்க வேண்டும் என்றார்.