பூநகரி பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால, பூநகரி மடத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மக்களோடும் கலந்துரையாடினார்.
அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ம.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மக்கள் தெரிவிக்கையில்
இந்த அரசாங்கத்தை பாதுகாக்கும் கடமை எமக்குள்ளது. 70வருடங்களாக பெரும் துயரத்திற்கு ஆளாகி இருந்தோம். தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கை வரவேற்கின்றோம் மாபியாவாக செயற்படுகின்றவர்களினால் பாதிப்பு ஏற்படுகின்றது.
கசிப்பு கஞ்சா அதிகம் காணப்படுகிறது. பயத்துடன் என்ன நடக்கும் என்று தெரியாது பெண்ணொருவர் கூறுகின்றார்.
தமிழ் பொலிஸ் அதிகாரி இல்லை பொலிஸ் காவலரண் அமைக்கவேண்டும், தண்டனை கடுமையாக்கப்படவேண்டும், கிளிநொச்சியில் மதுபான சாலைகள் அதிகம்
மக்கள் மத்தியில் அமைச்சர் தெரிவிக்கையில்
உங்களுக்கு நிறைய பிரச்சனை உள்ளது. போதைப்பொருளுக்கு தீர்வு காணுவோம் பொலிஸ் குழுக்களை நியமிப்போம். சுற்றுநிருபம் வந்துள்ளது.
சுற்றிவளைப்பு செய்ய வேண்டுமாக இருந்தால் செய்வோம். போதைக்கு அடிமையான இளைஞர்களுக்கு நீதிமன்றம் அனுப்பாமல் பெற்றோரின் விருப்பத்திற்கு புனர்வாழ்வு அளிக்கப்படும்.
ஒருவரும் பயப்படவேண்டியதில்லை. நல்லதொரு பாதுகாப்பான நாட்டுக்காகவே ஒரு வருடத்திற்கு முன்பு ஜனாதிபதி தலைமையில் அரசாங்கத்தை அமைத்துக்கொண்டோம் என கருத்து தெரிவித்தார்.
போதைக்கு அடிமையான இளைஞர்கள் - பூநகரியில் வைத்து பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல் பூநகரி பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால, பூநகரி மடத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மக்களோடும் கலந்துரையாடினார்.அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ம.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.இதன்போது மக்கள் தெரிவிக்கையில் இந்த அரசாங்கத்தை பாதுகாக்கும் கடமை எமக்குள்ளது. 70வருடங்களாக பெரும் துயரத்திற்கு ஆளாகி இருந்தோம். தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கை வரவேற்கின்றோம் மாபியாவாக செயற்படுகின்றவர்களினால் பாதிப்பு ஏற்படுகின்றது.கசிப்பு கஞ்சா அதிகம் காணப்படுகிறது. பயத்துடன் என்ன நடக்கும் என்று தெரியாது பெண்ணொருவர் கூறுகின்றார். தமிழ் பொலிஸ் அதிகாரி இல்லை பொலிஸ் காவலரண் அமைக்கவேண்டும், தண்டனை கடுமையாக்கப்படவேண்டும், கிளிநொச்சியில் மதுபான சாலைகள் அதிகம் மக்கள் மத்தியில் அமைச்சர் தெரிவிக்கையில் உங்களுக்கு நிறைய பிரச்சனை உள்ளது. போதைப்பொருளுக்கு தீர்வு காணுவோம் பொலிஸ் குழுக்களை நியமிப்போம். சுற்றுநிருபம் வந்துள்ளது. சுற்றிவளைப்பு செய்ய வேண்டுமாக இருந்தால் செய்வோம். போதைக்கு அடிமையான இளைஞர்களுக்கு நீதிமன்றம் அனுப்பாமல் பெற்றோரின் விருப்பத்திற்கு புனர்வாழ்வு அளிக்கப்படும். ஒருவரும் பயப்படவேண்டியதில்லை. நல்லதொரு பாதுகாப்பான நாட்டுக்காகவே ஒரு வருடத்திற்கு முன்பு ஜனாதிபதி தலைமையில் அரசாங்கத்தை அமைத்துக்கொண்டோம் என கருத்து தெரிவித்தார்.