பெண்கள் மதுபானம் வாங்கவும், மதுபானம் தொடர்பான தொழில்களில் ஈடுபடவும் அனுமதி கோரி, பெண்ணிய ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை, உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.
பெண்கள் எந்தவொரு உரிமம் பெற்ற விற்பனை நிலையத்திலிருந்தும் மதுபானம் கொள்வனவு செய்யவும், மதுபான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் பணிபுரியவும், சில்லறை விற்பனை நிலையங்களில் மதுபானம் அருந்தவும் அனுமதிக்கும் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தே இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம் முன்னைய வர்த்தமானி திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை சட்டம் இப்போது மதுபான விற்பனை, உற்பத்தி மற்றும் நுகர்வு தொடர்பாகப் பெண்களுக்குச் சம உரிமைகளை அங்கீகரிக்கிறது என்று உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில், முன்னைய கட்டுப்பாடுகளை ரத்து செய்து புதிய வர்த்தமானியை அரசு வெளியிட்டுள்ளமையால், தமது மனுவைத் தொடர விரும்பவில்லை என்று மனுதாரர்கள் தரப்பு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
பெண்களுக்கு மதுபான சுதந்திரம்: உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் பெண்கள் மதுபானம் வாங்கவும், மதுபானம் தொடர்பான தொழில்களில் ஈடுபடவும் அனுமதி கோரி, பெண்ணிய ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை, உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது. பெண்கள் எந்தவொரு உரிமம் பெற்ற விற்பனை நிலையத்திலிருந்தும் மதுபானம் கொள்வனவு செய்யவும், மதுபான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் பணிபுரியவும், சில்லறை விற்பனை நிலையங்களில் மதுபானம் அருந்தவும் அனுமதிக்கும் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தே இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம் முன்னைய வர்த்தமானி திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை சட்டம் இப்போது மதுபான விற்பனை, உற்பத்தி மற்றும் நுகர்வு தொடர்பாகப் பெண்களுக்குச் சம உரிமைகளை அங்கீகரிக்கிறது என்று உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில், முன்னைய கட்டுப்பாடுகளை ரத்து செய்து புதிய வர்த்தமானியை அரசு வெளியிட்டுள்ளமையால், தமது மனுவைத் தொடர விரும்பவில்லை என்று மனுதாரர்கள் தரப்பு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.