• Jul 25 2025

நாடு முழுவதும் காயமடைந்த 20 காட்டு யானைகளுக்கு சிகிச்சை

Chithra / Jul 24th 2025, 11:51 am
image


நாடு முழுவதும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட 20 காட்டு யானைகளுக்கு வனவிலங்கு அதிகாரிகள் சிகிச்சை அளித்து வருவதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சிகிச்சை பெற்று வரும் காட்டு யானைகளில் பெரும்பாலானவை துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் மற்றும் பொறியில் சிக்கியதன் காரணமாக காலில் காயமடைந்த யானைகள் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, அனுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் 8 காட்டு யானைகளும், பொலன்னறுவை வனவிலங்கு வலயத்தில் நான்கு காட்டு யானைகளும், வடமேல் வனவிலங்கு வலயத்தில் மூன்று காட்டு யானைகளும், ஊவா வனவிலங்கு வலயத்தில் ஐந்து காட்டு யானைகளும்  சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, திகம்பதஹ பகுதியில் பதிவான மூன்று காட்டு யானைகள் உயிரிழந்தமை குறித்து விசாரணை நடத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் பிற உதவிகளை வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்தார். 

நாடு முழுவதும் காயமடைந்த 20 காட்டு யானைகளுக்கு சிகிச்சை நாடு முழுவதும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட 20 காட்டு யானைகளுக்கு வனவிலங்கு அதிகாரிகள் சிகிச்சை அளித்து வருவதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிகிச்சை பெற்று வரும் காட்டு யானைகளில் பெரும்பாலானவை துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் மற்றும் பொறியில் சிக்கியதன் காரணமாக காலில் காயமடைந்த யானைகள் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அனுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் 8 காட்டு யானைகளும், பொலன்னறுவை வனவிலங்கு வலயத்தில் நான்கு காட்டு யானைகளும், வடமேல் வனவிலங்கு வலயத்தில் மூன்று காட்டு யானைகளும், ஊவா வனவிலங்கு வலயத்தில் ஐந்து காட்டு யானைகளும்  சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, திகம்பதஹ பகுதியில் பதிவான மூன்று காட்டு யானைகள் உயிரிழந்தமை குறித்து விசாரணை நடத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் பிற உதவிகளை வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement