• Jul 27 2025

செம்மணி மனித எச்சங்கள் தொடர்பாக ஆழ்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் - ராவண சேனை அமைப்பின் தலைவர்!

shanuja / Jul 26th 2025, 8:37 pm
image

செம்மணி புதைகுழியில் வெளிப்பட்டுள்ள மனித எச்சங்கள் தொடர்பாக ஆழ்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இராவண சேனை  தலைவர் கு.செந்தூரன் தெரிவித்துள்ளார்.


செம்மணி புதைகுழி தொடர்பாக சர்வதேச நீதியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ராவண சேனை அமைப்பினரால் இன்று (26) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது கருத்துத் தெரிவித்த இராவண சேனை  தலைவர் கு.செந்தூரன், 


செம்மணி புதைகுழியில் வெளிப்பட்டுள்ள மனித எச்சங்கள் தொடர்பாக ஆழ்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தேசிய மட்டத்தில் நடக்கும் விசாரணைகள் போதுமானவை அல்ல என்பதால் சர்வதேச நீதிமுறை அவசியம். 


அதேநேரம், அண்மையில் திருகோணமலை சம்பூர் பகுதியில் தென்பட்ட மனித எச்சங்கள் குறித்தும் கருத்து வெளியிடப்பட்டதுடன், இது போன்ற சம்பவங்கள் அனைத்திற்கும் ஒரே நேர்மையான சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தப்பட்டது.


மேலும், அரசாங்கம் இந்த விவகாரத்தில் வெளிப்படையாக செயல்பட வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீதி கோரிக்கைக்கு தக்க பதில் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

செம்மணி மனித எச்சங்கள் தொடர்பாக ஆழ்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் - ராவண சேனை அமைப்பின் தலைவர் செம்மணி புதைகுழியில் வெளிப்பட்டுள்ள மனித எச்சங்கள் தொடர்பாக ஆழ்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இராவண சேனை  தலைவர் கு.செந்தூரன் தெரிவித்துள்ளார்.செம்மணி புதைகுழி தொடர்பாக சர்வதேச நீதியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ராவண சேனை அமைப்பினரால் இன்று (26) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது கருத்துத் தெரிவித்த இராவண சேனை  தலைவர் கு.செந்தூரன், செம்மணி புதைகுழியில் வெளிப்பட்டுள்ள மனித எச்சங்கள் தொடர்பாக ஆழ்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தேசிய மட்டத்தில் நடக்கும் விசாரணைகள் போதுமானவை அல்ல என்பதால் சர்வதேச நீதிமுறை அவசியம். அதேநேரம், அண்மையில் திருகோணமலை சம்பூர் பகுதியில் தென்பட்ட மனித எச்சங்கள் குறித்தும் கருத்து வெளியிடப்பட்டதுடன், இது போன்ற சம்பவங்கள் அனைத்திற்கும் ஒரே நேர்மையான சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தப்பட்டது.மேலும், அரசாங்கம் இந்த விவகாரத்தில் வெளிப்படையாக செயல்பட வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீதி கோரிக்கைக்கு தக்க பதில் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement