• May 04 2025

ஓடும் காரில் இருந்து குதித்த பெண் - கைவரிசை காட்டிய கார் திருடன்

Thansita / May 4th 2025, 4:47 pm
image

ரத்மலானை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை  கல்கிஸை பொலிஸ் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் கார் ஒன்று திருடப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் படி 81 வயது முதியவர் , 76 வயதான தனது மனைவியுடன் காரில் அருகிலுள்ள வங்கிக்குச் சென்ற போது இந்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த முதியவர் தனது மனைவியை காரில் இருக்கச் செய்துவிட்டு,  காரை விட்டு வெளியேறியதும், சந்தேகநபர் காரை எடுத்துச் சென்றுள்ளார்.

காரை திருடிய சந்தேக நபர் நிறுத்தப்பட்டிருந்த காரைசுற்றி வளைத்து, உள்ளே தனியாக இருந்த பெண்ணைக் கவனித்து, திடீரென காரில் நுழைந்து பின்னர் காரை ஓட்டிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

அந்தப் பெண்ணை வெளியே குதிக்க வேண்டாம் என்று கூறியதாகவும், ஆனால் திடீரென நடந்த சம்பவத்தால் பயந்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நகரும் வாகனத்தில் இருந்து அந்தப் பெண் குதித்ததாகவும் அந்த வயதான பெண் கூறியுள்ளார் .

இதேவேளை  அதே வாகனம் அன்றைய தினம் தெஹிவளையில் நடந்த தங்கச் சங்கிலி பறிப்பு குற்றச் செயலிலும் பயன்படுத்தப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது .

ஓடும் காரில் இருந்து குதித்த பெண் - கைவரிசை காட்டிய கார் திருடன் ரத்மலானை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை  கல்கிஸை பொலிஸ் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் கார் ஒன்று திருடப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.அதன் படி 81 வயது முதியவர் , 76 வயதான தனது மனைவியுடன் காரில் அருகிலுள்ள வங்கிக்குச் சென்ற போது இந்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.குறித்த முதியவர் தனது மனைவியை காரில் இருக்கச் செய்துவிட்டு,  காரை விட்டு வெளியேறியதும், சந்தேகநபர் காரை எடுத்துச் சென்றுள்ளார்.காரை திருடிய சந்தேக நபர் நிறுத்தப்பட்டிருந்த காரைசுற்றி வளைத்து, உள்ளே தனியாக இருந்த பெண்ணைக் கவனித்து, திடீரென காரில் நுழைந்து பின்னர் காரை ஓட்டிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,அந்தப் பெண்ணை வெளியே குதிக்க வேண்டாம் என்று கூறியதாகவும், ஆனால் திடீரென நடந்த சம்பவத்தால் பயந்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நகரும் வாகனத்தில் இருந்து அந்தப் பெண் குதித்ததாகவும் அந்த வயதான பெண் கூறியுள்ளார் .இதேவேளை  அதே வாகனம் அன்றைய தினம் தெஹிவளையில் நடந்த தங்கச் சங்கிலி பறிப்பு குற்றச் செயலிலும் பயன்படுத்தப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது .

Advertisement

Advertisement

Advertisement