• May 14 2025

சுமார் 100 உள்ளுராட்சிமன்றங்களில் எமது ஆதரவின்றி எவராலும் ஆட்சியமைக்க முடியாது! சுதந்திர கட்சி கருத்து

Chithra / May 13th 2025, 8:40 am
image

 

உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அப்பால், ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நாம் ஆட்சியமைப்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். 

அந்த வகையில் 40 உள்ளுராட்சிமன்றங்களில் எம்மால் ஆட்சியமைக்க முடியும் என தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சிமன்றங்களில் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் சபைகளை நிறுவுதல், கூட்டணியமைத்தல் குறித்து அரசியல் குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

கட்சியின் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கமையவே உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். 

ஏனைய கட்சிகள் சபைகளை அமைப்பதற்கு எமது ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாகும். 

அத்தோடு சில உள்ளுராட்சிமன்றங்களில் ஏனையோரின் ஒத்துழைப்புடன் எமக்கு ஆட்சியமைக்கக் கூடிய நிலைமை கூட காணப்படுகிறது.

இது தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்தியிருக்கின்றோம். சில தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 100 உள்ளுராட்சிமன்றங்களில் எமது ஆதரவின்றி எவராலும் சபைகளை நிறுவ முடியாது. எவ்வாறிருப்பினும் நாம் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை.என்றார். 

சுமார் 100 உள்ளுராட்சிமன்றங்களில் எமது ஆதரவின்றி எவராலும் ஆட்சியமைக்க முடியாது சுதந்திர கட்சி கருத்து  உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அப்பால், ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நாம் ஆட்சியமைப்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். அந்த வகையில் 40 உள்ளுராட்சிமன்றங்களில் எம்மால் ஆட்சியமைக்க முடியும் என தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,உள்ளுராட்சிமன்றங்களில் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் சபைகளை நிறுவுதல், கூட்டணியமைத்தல் குறித்து அரசியல் குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கமையவே உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். ஏனைய கட்சிகள் சபைகளை அமைப்பதற்கு எமது ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாகும். அத்தோடு சில உள்ளுராட்சிமன்றங்களில் ஏனையோரின் ஒத்துழைப்புடன் எமக்கு ஆட்சியமைக்கக் கூடிய நிலைமை கூட காணப்படுகிறது.இது தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்தியிருக்கின்றோம். சில தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.சுமார் 100 உள்ளுராட்சிமன்றங்களில் எமது ஆதரவின்றி எவராலும் சபைகளை நிறுவ முடியாது. எவ்வாறிருப்பினும் நாம் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை.என்றார். 

Advertisement

Advertisement

Advertisement