• Jun 08 2026

கேள்விகளால் கொந்தளித்த ட்ரம்ப் - நேர்காணலில் பாதியில் வெளியேறியதால் பரபரப்பு!

shanu / Jun 8th 2026, 9:36 pm
image


நேர்காணல் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அமெரிக்க ஜனாதிபதி   டொனால்ட் ட்ரம்ப் திடீரென வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனமான என்பிசி நியூஸ் நெறியாளர் கிறிஸ்டன் வெல்கர்,  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நேர்காணல் செய்தார்.  


இதன்போது பல்வேறு  விவகாரங்கள் தொடர்பில் கேள்வியெழுப்பபட்டபோது, ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை, முந்தைய ஆட்சியாளர்களின் திட்டங்கள், ட்ரம்ப் நிர்வாகத்தின் 'Anti-Weaponisation' நிதி மற்றும் கலிபோர்னியா தேர்தல் முறைகேடு போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். 


அத்துடன் கலிபோர்னியா தேர்தலில் முறைகேடு நடப்பதாக ட்ரம்ப் கூறிய குற்றச்சாட்டை நெறியாளர் கிறிஸ்டன் வெல்கர் நிராகரித்தார். மேலும்  நிதி குறித்துப் பேசும்போது, ஜோ பைடனின் மோசமான ஆட்சிதான் காரணம் என குற்றம் சுமத்தினார். இதற்கு சரியான ஆதாரம் இல்லை என நெறியாளர் கூறிய நிலையில்  ஆதாரம் இருப்பதாக ட்ரம்ப் வாதிட்டுள்ளார். 


இதனையடுத்து நெறியாளருக்கும் ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டுள்ளது. 


இந்த நிலையில் ஊடகங்கள் சார்பு நிலையுடன் செயல்படுவதாகக்  ட்ரம்ப் குற்றம் சுமத்தி, நேர்மையற்ற ஊடகங்களைக் கொண்ட நாடு சிறந்த நாடாக இருக்க முடியாது எனக்கூறி நேர்காணலை பாதியிலேயே நிறுத்தி வெளியேறினார்.


ஜனாதிபதி ட்ரம்ப் நேர்காணலில் இருந்து பாதியில் வெளியேறிய சம்பவம்  தற்போது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. 


கேள்விகளால் கொந்தளித்த ட்ரம்ப் - நேர்காணலில் பாதியில் வெளியேறியதால் பரபரப்பு நேர்காணல் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அமெரிக்க ஜனாதிபதி   டொனால்ட் ட்ரம்ப் திடீரென வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனமான என்பிசி நியூஸ் நெறியாளர் கிறிஸ்டன் வெல்கர்,  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நேர்காணல் செய்தார்.  இதன்போது பல்வேறு  விவகாரங்கள் தொடர்பில் கேள்வியெழுப்பபட்டபோது, ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை, முந்தைய ஆட்சியாளர்களின் திட்டங்கள், ட்ரம்ப் நிர்வாகத்தின் 'Anti-Weaponisation' நிதி மற்றும் கலிபோர்னியா தேர்தல் முறைகேடு போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அத்துடன் கலிபோர்னியா தேர்தலில் முறைகேடு நடப்பதாக ட்ரம்ப் கூறிய குற்றச்சாட்டை நெறியாளர் கிறிஸ்டன் வெல்கர் நிராகரித்தார். மேலும்  நிதி குறித்துப் பேசும்போது, ஜோ பைடனின் மோசமான ஆட்சிதான் காரணம் என குற்றம் சுமத்தினார். இதற்கு சரியான ஆதாரம் இல்லை என நெறியாளர் கூறிய நிலையில்  ஆதாரம் இருப்பதாக ட்ரம்ப் வாதிட்டுள்ளார். இதனையடுத்து நெறியாளருக்கும் ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊடகங்கள் சார்பு நிலையுடன் செயல்படுவதாகக்  ட்ரம்ப் குற்றம் சுமத்தி, நேர்மையற்ற ஊடகங்களைக் கொண்ட நாடு சிறந்த நாடாக இருக்க முடியாது எனக்கூறி நேர்காணலை பாதியிலேயே நிறுத்தி வெளியேறினார்.ஜனாதிபதி ட்ரம்ப் நேர்காணலில் இருந்து பாதியில் வெளியேறிய சம்பவம்  தற்போது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement