அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரில் பிரதான வீதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தைப் பகுதிகளில் மாடுகள் கட்டுப்பாடின்றித் திரிவதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, நகரின் பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பாதசாரிகளும் வாகன சாரதிகளும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடந்த காலங்களில் இவ்வாறு வீதிகளில் திரிந்த மாடுகளால் பல விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், பயணிகள் பலரும் காயமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் கல்முனை மாநகர சபைக்கு பொதுமக்களும் வர்த்தகர்களும் பல தடவைகள் எழுத்துமூலமாகவும் நேரடியாகவும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும், இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கும் மக்கள், மாநகர சபையின் செயற்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் வரை அதிகாரிகள் காத்திருக்கின்றனரா? எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பையும் போக்குவரத்தையும் நேரடியாகப் பாதிக்கும் இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது உள்ளூராட்சி மன்றத்தின் முக்கிய பொறுப்பு எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, பிரதான வீதிகள் மற்றும் சந்தைப் பகுதிகளில் கட்டுப்பாடின்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளைக் கைப்பற்றிப் பட்டிகளில் அடைத்தல், உரிமையாளர்களுக்குத் தண்டப்பணம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாரிய விபத்துகள் அல்லது உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்னர் கல்முனை மாநகர சபையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் வரை அதிகாரிகள் காத்திருக்கின்றனரா மக்கள் ஆதங்கம் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரில் பிரதான வீதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தைப் பகுதிகளில் மாடுகள் கட்டுப்பாடின்றித் திரிவதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக, நகரின் பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பாதசாரிகளும் வாகன சாரதிகளும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.கடந்த காலங்களில் இவ்வாறு வீதிகளில் திரிந்த மாடுகளால் பல விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், பயணிகள் பலரும் காயமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்தப் பிரச்சினை தொடர்பில் கல்முனை மாநகர சபைக்கு பொதுமக்களும் வர்த்தகர்களும் பல தடவைகள் எழுத்துமூலமாகவும் நேரடியாகவும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.எனினும், இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கும் மக்கள், மாநகர சபையின் செயற்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் வரை அதிகாரிகள் காத்திருக்கின்றனரா எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.பொதுமக்களின் பாதுகாப்பையும் போக்குவரத்தையும் நேரடியாகப் பாதிக்கும் இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது உள்ளூராட்சி மன்றத்தின் முக்கிய பொறுப்பு எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.எனவே, பிரதான வீதிகள் மற்றும் சந்தைப் பகுதிகளில் கட்டுப்பாடின்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளைக் கைப்பற்றிப் பட்டிகளில் அடைத்தல், உரிமையாளர்களுக்குத் தண்டப்பணம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.பாரிய விபத்துகள் அல்லது உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்னர் கல்முனை மாநகர சபையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.