தங்காலை – உனாகூருவ கடற்கரையில் நீராடச் சென்ற இரு இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இளைஞர் காணாமல் போயுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலில் நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்களும் நீரில் மூழ்கிய நிலையில், அவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் உனாகூருவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதேவேளை, காணாமல் போயுள்ளவர் கிரிந்த பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் சற்று நேரத்தில் நடந்த சோக சம்பவம் தங்காலை – உனாகூருவ கடற்கரையில் நீராடச் சென்ற இரு இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இளைஞர் காணாமல் போயுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடலில் நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்களும் நீரில் மூழ்கிய நிலையில், அவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்தவர் உனாகூருவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.அதேவேளை, காணாமல் போயுள்ளவர் கிரிந்த பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.