• Oct 31 2026

தாயை இழந்த 9 வயது சிறுமிக்கு சித்தியால் நேர்ந்த கொடூரம்! 10 ஆண்டுகளின் பின் கிடைத்த நீதி

Chithra / Oct 30th 2026, 10:57 am
image


மட்டக்களப்பில் 9 வயது சிறுமிக்கு ஒரு வருடகாலமாக இடம்பெற்ற கொடூர சித்திரவதை சம்பவம் தொடர்பில், பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் முக்கிய நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.


தாயை இழந்த சிறுமியின் தந்தை,  பெண்ணொருவரை இரண்டாவது திருமணம் செய்திருந்தார்.


ஆனால், அந்தச் சிறுமிக்கு தனது சித்தியால் நேர்ந்த கொடுமைகள் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளன.


2015ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் திகதி வரை, சிறுமிக்கு இரும்புக் கரண்டியால் சூடு வைத்தும், வாயில் துணியை அடைத்து தாக்கியும் தொடர்ச்சியாகச் சித்திரவதை செய்யப்பட்டதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து, 2016ஆம் ஆண்டு சிறுமியின் சித்தி கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.


2022ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், கடந்த 13ஆம் திகதி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.


இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன், குற்றவாளிக்கு மூன்று குற்றங்களுக்காகவும் தலா 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்தார்.


எனினும், தண்டனைகளை ஒரே காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டதால், அவர் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.


அத்துடன், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாயை இழந்த 9 வயது சிறுமிக்கு சித்தியால் நேர்ந்த கொடூரம் 10 ஆண்டுகளின் பின் கிடைத்த நீதி மட்டக்களப்பில் 9 வயது சிறுமிக்கு ஒரு வருடகாலமாக இடம்பெற்ற கொடூர சித்திரவதை சம்பவம் தொடர்பில், பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் முக்கிய நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.தாயை இழந்த சிறுமியின் தந்தை,  பெண்ணொருவரை இரண்டாவது திருமணம் செய்திருந்தார்.ஆனால், அந்தச் சிறுமிக்கு தனது சித்தியால் நேர்ந்த கொடுமைகள் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளன.2015ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் திகதி வரை, சிறுமிக்கு இரும்புக் கரண்டியால் சூடு வைத்தும், வாயில் துணியை அடைத்து தாக்கியும் தொடர்ச்சியாகச் சித்திரவதை செய்யப்பட்டதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, 2016ஆம் ஆண்டு சிறுமியின் சித்தி கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.2022ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், கடந்த 13ஆம் திகதி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன், குற்றவாளிக்கு மூன்று குற்றங்களுக்காகவும் தலா 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்தார்.எனினும், தண்டனைகளை ஒரே காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டதால், அவர் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.அத்துடன், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement