2027ஆம் ஆண்டு முதல் இலங்கையர்களை இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளுக்குப் பணியமர்த்தும் நடவடிக்கைகள், இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையில் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்களின் கீழ் மாத்திரமே முன்னெடுக்கப்படவுள்ளன.
இஸ்ரேல் அரசாங்கத்தின் இந்தப் புதிய கொள்கைத் தீர்மானம் தொடர்பில், இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, உரிமம் பெற்ற தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக தற்போது முன்னெடுக்கப்படும் இஸ்ரேலிய வேலைவாய்ப்புப் பணியமர்த்தல் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.
கட்டுமானம், தொழிற்சாலை, வர்த்தகம் மற்றும் சேவைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 2027ஆம் ஆண்டு முதல் பணியமர்த்தப்படவுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை, தெரிவு செய்யப்படும் முறை மற்றும் புதிய நடைமுறைகள் தொடர்பான உத்தியோகபூர்வ விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், இஸ்ரேல் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறும் தனிநபர்களுக்கோ அல்லது தனியார் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கோ பணம் செலுத்த வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, தனியார் நிறுவனங்கள் நடத்தும் திறன் பரீட்சைகள், நேர்முகத் தேர்வுகள் மற்றும் ஏனைய தெரிவு நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் வேலைவாய்ப்பில் புதிய விதிமுறை – இலங்கையர்களுக்கு என்ன நடக்கப்போகிறது 2027ஆம் ஆண்டு முதல் இலங்கையர்களை இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளுக்குப் பணியமர்த்தும் நடவடிக்கைகள், இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையில் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்களின் கீழ் மாத்திரமே முன்னெடுக்கப்படவுள்ளன.இஸ்ரேல் அரசாங்கத்தின் இந்தப் புதிய கொள்கைத் தீர்மானம் தொடர்பில், இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, உரிமம் பெற்ற தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக தற்போது முன்னெடுக்கப்படும் இஸ்ரேலிய வேலைவாய்ப்புப் பணியமர்த்தல் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.கட்டுமானம், தொழிற்சாலை, வர்த்தகம் மற்றும் சேவைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், 2027ஆம் ஆண்டு முதல் பணியமர்த்தப்படவுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை, தெரிவு செய்யப்படும் முறை மற்றும் புதிய நடைமுறைகள் தொடர்பான உத்தியோகபூர்வ விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.இந்த நிலையில், இஸ்ரேல் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறும் தனிநபர்களுக்கோ அல்லது தனியார் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கோ பணம் செலுத்த வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, தனியார் நிறுவனங்கள் நடத்தும் திறன் பரீட்சைகள், நேர்முகத் தேர்வுகள் மற்றும் ஏனைய தெரிவு நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.