அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான பேருந்து நிலையம், முறையான பராமரிப்பின்றி பாரிய சுகாதாரச் சீர்கேடுகளுடன் காணப்படுவதாகப் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இப்பேருந்து நிலையம், தற்போது எருமை மாடுகள், பசுக்கள் மற்றும் தெருநாய்கள் நடமாடும் இடமாக மாறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
பயணிகள் அமர்வதற்கான இருக்கைகளில் பறவைகளின் எச்சங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் காணப்படுவதால், அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதிகள் இல்லாததால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதுடன், சமூக விரோதச் செயல்களும் இடம்பெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கல்முனை மாநகர சபை, பொலிஸ் நிலையம் மற்றும் சுகாதாரப் பணிமனை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் அருகிலிருந்தும் பேருந்து நிலையம் இவ்வாறான அவலநிலையில் காணப்படுவது குறித்து மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
எனவே, பேருந்து நிலையத்தைத் தினமும் துப்புரவு செய்தல், கால்நடைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல், மின்விளக்குகள் மற்றும் CCTV கமராக்களைப் பொருத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணிகளுக்கான பேருந்து நிலையமா கால்நடைகளின் கூடாரமா கல்முனையில் தொடரும் அவலம் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான பேருந்து நிலையம், முறையான பராமரிப்பின்றி பாரிய சுகாதாரச் சீர்கேடுகளுடன் காணப்படுவதாகப் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இப்பேருந்து நிலையம், தற்போது எருமை மாடுகள், பசுக்கள் மற்றும் தெருநாய்கள் நடமாடும் இடமாக மாறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.பயணிகள் அமர்வதற்கான இருக்கைகளில் பறவைகளின் எச்சங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் காணப்படுவதால், அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.மேலும், இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதிகள் இல்லாததால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதுடன், சமூக விரோதச் செயல்களும் இடம்பெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.கல்முனை மாநகர சபை, பொலிஸ் நிலையம் மற்றும் சுகாதாரப் பணிமனை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் அருகிலிருந்தும் பேருந்து நிலையம் இவ்வாறான அவலநிலையில் காணப்படுவது குறித்து மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.எனவே, பேருந்து நிலையத்தைத் தினமும் துப்புரவு செய்தல், கால்நடைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல், மின்விளக்குகள் மற்றும் CCTV கமராக்களைப் பொருத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.