நாட்டில் தொடரும் கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு முக்கிய தீர்மானமொன்றை எடுத்துள்ளது.
தொடர்ச்சியான மழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயங்கள் அதிகரித்துள்ளன.
இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் முன்னதாக மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது நிலைமையைக் கருத்திற்கொண்டு நாடளாவிய ரீதியில் புதிய தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை வழங்கப்படுவதாகக் கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இருப்பினும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் முன்னர் திட்டமிட்டபடியே நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
நாளை பாடசாலைகள் இயங்குமா பரீட்சைகள் நடைபெறுமா கல்வி அமைச்சின் அறிவிப்பு நாட்டில் தொடரும் கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு முக்கிய தீர்மானமொன்றை எடுத்துள்ளது.தொடர்ச்சியான மழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயங்கள் அதிகரித்துள்ளன.இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் முன்னதாக மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.ஆனால், தற்போது நிலைமையைக் கருத்திற்கொண்டு நாடளாவிய ரீதியில் புதிய தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை வழங்கப்படுவதாகக் கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.இருப்பினும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் முன்னர் திட்டமிட்டபடியே நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.