• May 14 2025

கிளிநொச்சியில் களைகட்டிய வெசாக் கொண்டாட்டம்..!

Sharmi / May 13th 2025, 9:55 am
image

கிளிநொச்சி இரணைமடு சந்தி பகுதியில் இலங்கை முதலாவது படைப்பிரிவின் படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் இரவு(12) வெசாக் வலயம் திறந்து வைக்கப்பட்டது 

இலங்கை பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி இரணைமடு  சந்தியில் அமைந்துள்ள முதலாவது படைப்பிரிவு இராணுவ தலைமையகம் முன்பு குறித்த வெசாக்  வலயம் திறந்து வைக்கப்பட்டது 

குறித்த  நிகழ்வு சமய வழிபாடுகள் தொடர்ந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் மதத் தலைவர்கள் மாவட்ட செயலாளர் சு. முரளிதரன்   முதலாவது படைப் பிரிவின் கட்டளையதிகாரி உள்ளிட்ட இரானுவ  அதிகாரிகள் மற்றும் படையினர் பெருந்திரளான பொதுமக்கள் என கலந்து கொண்டிருந்தனர்

இதேபோன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வெசாக் தினத்தை முன்னிட்டு கடலை தானம் வழங்கும் நிகழ்வு, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் கிளிநொச்சி நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


கிளிநொச்சியில் களைகட்டிய வெசாக் கொண்டாட்டம். கிளிநொச்சி இரணைமடு சந்தி பகுதியில் இலங்கை முதலாவது படைப்பிரிவின் படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் இரவு(12) வெசாக் வலயம் திறந்து வைக்கப்பட்டது இலங்கை பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி இரணைமடு  சந்தியில் அமைந்துள்ள முதலாவது படைப்பிரிவு இராணுவ தலைமையகம் முன்பு குறித்த வெசாக்  வலயம் திறந்து வைக்கப்பட்டது குறித்த  நிகழ்வு சமய வழிபாடுகள் தொடர்ந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் மதத் தலைவர்கள் மாவட்ட செயலாளர் சு. முரளிதரன்   முதலாவது படைப் பிரிவின் கட்டளையதிகாரி உள்ளிட்ட இரானுவ  அதிகாரிகள் மற்றும் படையினர் பெருந்திரளான பொதுமக்கள் என கலந்து கொண்டிருந்தனர்இதேபோன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வெசாக் தினத்தை முன்னிட்டு கடலை தானம் வழங்கும் நிகழ்வு, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் கிளிநொச்சி நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement