• Jan 19 2026

ஹட்டனில் வாகன விபத்து: இருவர் படுகாயம்!

dileesiya / Jan 17th 2026, 5:04 pm
image

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில், ஹட்டன் குடாகம சந்திக்கு அருகில் இன்று (17) பிற்பகல் பட்டா ரக வாகனமும்  வானும் மோதி விபத்துக்குள்ளானதில், வானின் சாரதியும் மற்றுமொரு நபரும் படுகாயமடைந்துள்ளனர். 


காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 


விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 


ஹட்டனில் இருந்து குடாகம நோக்கிச் சென்ற பட்டா ரக வாகனம், பிரதான வீதியிலிருந்து இடது பக்கமாகத் திரும்பி குறுக்கு வீதியொன்றுக்குள் நுழைய முற்பட்டபோதே, டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற வான் பட்டா ரக வாகனத்துடன்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 


இவ்விபத்தில் இரு வாகனமும் பலத்த சேதமடைந்துள்ளன.  பட்டா ரக வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹட்டனில் வாகன விபத்து: இருவர் படுகாயம் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில், ஹட்டன் குடாகம சந்திக்கு அருகில் இன்று (17) பிற்பகல் பட்டா ரக வாகனமும்  வானும் மோதி விபத்துக்குள்ளானதில், வானின் சாரதியும் மற்றுமொரு நபரும் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹட்டனில் இருந்து குடாகம நோக்கிச் சென்ற பட்டா ரக வாகனம், பிரதான வீதியிலிருந்து இடது பக்கமாகத் திரும்பி குறுக்கு வீதியொன்றுக்குள் நுழைய முற்பட்டபோதே, டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற வான் பட்டா ரக வாகனத்துடன்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் இரு வாகனமும் பலத்த சேதமடைந்துள்ளன.  பட்டா ரக வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement