• Jul 08 2025

வடமராட்சி கிழக்கு பொது மைதானம் கட்டாக்காலி மாடுகளின் இருப்பிடம் - பொதுமக்கள் விசனம்!

shanuja / Jul 7th 2025, 9:51 am
image

வடமராட்சி கிழக்கு பொது மைதானம் கட்டாக்காலி மாடுகளின் வாழ்விடமாக காணப்படுகின்றது என்று பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.  


பராமரிப்பு இன்றியும் ஒரு பக்க வேலியின்றியும்  காணப்படும் வடமராட்சி கிழக்கு பொது மைதானத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான மாடுகள் படுத்து உறங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.  


இதனால் பொது மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலை கடந்த பல வருடங்களாக காணப்படுகின்றது. இது தொடர்பில்  பிரதேச செயலம் மற்றும் பிரதேச சபையினருக்கு தெரியப்படுத்திய போதும்  எந்தவித நடவடிக்கையும்  எடுக்கவில்லை  என்று மக்கள் தெரிவித்துள்ளனர். 


வடமராட்சி வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள்,  உடனடியாக பொது மைதானத்தின் வேலிகளை சரி செய்து கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து பொது மைதானத்தின் தரத்தை பேணுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு பொது மைதானம் கட்டாக்காலி மாடுகளின் இருப்பிடம் - பொதுமக்கள் விசனம் வடமராட்சி கிழக்கு பொது மைதானம் கட்டாக்காலி மாடுகளின் வாழ்விடமாக காணப்படுகின்றது என்று பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.  பராமரிப்பு இன்றியும் ஒரு பக்க வேலியின்றியும்  காணப்படும் வடமராட்சி கிழக்கு பொது மைதானத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான மாடுகள் படுத்து உறங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதனால் பொது மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலை கடந்த பல வருடங்களாக காணப்படுகின்றது. இது தொடர்பில்  பிரதேச செயலம் மற்றும் பிரதேச சபையினருக்கு தெரியப்படுத்திய போதும்  எந்தவித நடவடிக்கையும்  எடுக்கவில்லை  என்று மக்கள் தெரிவித்துள்ளனர். வடமராட்சி வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள்,  உடனடியாக பொது மைதானத்தின் வேலிகளை சரி செய்து கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து பொது மைதானத்தின் தரத்தை பேணுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement