இதல்கஸ்ஹின்ன மற்றும் ஒஹிய ரயில் நிலையங்களுக்கு இடையில் மரங்கள் மற்றும் மண் மேடுகள் சரிந்து விழுந்தமையினால் மலையக ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு இயக்கப்படவிருந்த ரயில்கள் நானுஓயாவிற்கும், பதுளையில் இருந்து கொழும்புக்கு இயக்கப்படவிருந்த ரயில்கள் நானுஓயாவிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் இயக்கப்படும்.
மலையக ரயில் மார்க்கத்தில் பாதிக்குள்ளான பகுதி ஆபத்தான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் பராமரிப்பு பணிகள் இன்றிரவுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று பதுளையிலிருந்து கொழும்புக்கு இயக்கப்பட்ட இரவு நேர அஞ்சல் ரயில், இதல்கஸ்ஹின்ன மற்றும் ஒஹிய ரயில் நிலையங்களுக்கு இடையில் பாறைகள் மற்றும் மண் தண்டவாளத்தில் விழுந்ததால் தடம் புரண்டது.
சம்பவம் இடம்பெற்ற உடனேயே மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும், ரயில் போக்குவரத்து இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
மலையக ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு இதல்கஸ்ஹின்ன மற்றும் ஒஹிய ரயில் நிலையங்களுக்கு இடையில் மரங்கள் மற்றும் மண் மேடுகள் சரிந்து விழுந்தமையினால் மலையக ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, இன்று கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு இயக்கப்படவிருந்த ரயில்கள் நானுஓயாவிற்கும், பதுளையில் இருந்து கொழும்புக்கு இயக்கப்படவிருந்த ரயில்கள் நானுஓயாவிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் இயக்கப்படும்.மலையக ரயில் மார்க்கத்தில் பாதிக்குள்ளான பகுதி ஆபத்தான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் பராமரிப்பு பணிகள் இன்றிரவுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.நேற்று பதுளையிலிருந்து கொழும்புக்கு இயக்கப்பட்ட இரவு நேர அஞ்சல் ரயில், இதல்கஸ்ஹின்ன மற்றும் ஒஹிய ரயில் நிலையங்களுக்கு இடையில் பாறைகள் மற்றும் மண் தண்டவாளத்தில் விழுந்ததால் தடம் புரண்டது.சம்பவம் இடம்பெற்ற உடனேயே மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும், ரயில் போக்குவரத்து இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.