இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தல் ஈடுபட்டு வந்த படகுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று அதிகாலை யாழ்.கடற்கரையில் வைத்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து குறித்த படகு 350 கிலோகிராம் கஞ்சாவுடன் வருவதாக குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனையடுத்து குறித்த படகிலுள்ள கஞ்சாவை கரையில் வைத்து கைப்பற்றும் நடவடிக்கையில் குற்றத்தடுப்பு பொலிஸார் ஈடுபட்டனர்.
அதற்கமைய கரைக்கு வந்த படகை கைப்பற்றிய பொலிஸார் அதில் பயணித்த இருவரையும் கைது செய்தனர்.
இருந்தபோதிலும் கொண்டுவரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இடைநடுவில் கைமாற்றப்பட்டுள்ளதாகவும், குறித்த படகு இந்திய கடலில் பயணித்தமை ஜீ.பீ.எஸ் ஊடாக அவதானிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதனையடுத்து கைதானவர்களை அழைத்துச் செல்ல காத்திருந்த ஒருவர் 130 மில்லி கிராம் போதைப்பொருளுடன் கைதானதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தல் - படகுடன் மூவர் கைது இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தல் ஈடுபட்டு வந்த படகுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இன்று அதிகாலை யாழ்.கடற்கரையில் வைத்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.இந்தியாவிலிருந்து குறித்த படகு 350 கிலோகிராம் கஞ்சாவுடன் வருவதாக குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.அதனையடுத்து குறித்த படகிலுள்ள கஞ்சாவை கரையில் வைத்து கைப்பற்றும் நடவடிக்கையில் குற்றத்தடுப்பு பொலிஸார் ஈடுபட்டனர்.அதற்கமைய கரைக்கு வந்த படகை கைப்பற்றிய பொலிஸார் அதில் பயணித்த இருவரையும் கைது செய்தனர்.இருந்தபோதிலும் கொண்டுவரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இடைநடுவில் கைமாற்றப்பட்டுள்ளதாகவும், குறித்த படகு இந்திய கடலில் பயணித்தமை ஜீ.பீ.எஸ் ஊடாக அவதானிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.அதனையடுத்து கைதானவர்களை அழைத்துச் செல்ல காத்திருந்த ஒருவர் 130 மில்லி கிராம் போதைப்பொருளுடன் கைதானதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.