• Nov 21 2025

கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த கார்; அதிஸ்டவசமாக உயிர் தப்பிய சாரதி! வவுனியாவில் சம்பவம்

Chithra / Nov 20th 2025, 7:08 pm
image


வவுனியா - நொச்சிமோட்டை ஆற்றுக்குள் வீழ்ந்து கார் ஒன்று இன்று மாலை விபத்திற்குள்ளாகியது.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று மாலை வவுனியாவில் இருந்து யாழ். நோக்கி சென்றுகொண்டிருந்த கார் நொச்சிமோட்டை பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளது.

குறித்த விபத்தில் காரை ஓட்டிச்சென்ற சாரதி சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். 


குறித்த விபத்தினால் அங்கு பொருத்தப்பட்டுள்ள நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் நீர் வெளியேறி வருகின்றது. 

குறித்த விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை வவுனியாவில் கடந்த சிலநாட்களாக  மழையுடனான காலநிலை காணப்படுவதால் சாரதிகள் தமது வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த கார்; அதிஸ்டவசமாக உயிர் தப்பிய சாரதி வவுனியாவில் சம்பவம் வவுனியா - நொச்சிமோட்டை ஆற்றுக்குள் வீழ்ந்து கார் ஒன்று இன்று மாலை விபத்திற்குள்ளாகியது.குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,இன்று மாலை வவுனியாவில் இருந்து யாழ். நோக்கி சென்றுகொண்டிருந்த கார் நொச்சிமோட்டை பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளது.குறித்த விபத்தில் காரை ஓட்டிச்சென்ற சாரதி சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். குறித்த விபத்தினால் அங்கு பொருத்தப்பட்டுள்ள நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் நீர் வெளியேறி வருகின்றது. குறித்த விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதேவேளை வவுனியாவில் கடந்த சிலநாட்களாக  மழையுடனான காலநிலை காணப்படுவதால் சாரதிகள் தமது வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement