• Nov 21 2025

நெடுங்கேணி பொலிஸ் சாஜன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

Chithra / Nov 20th 2025, 7:51 pm
image


வவுனியா - நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் சாஜன் தர உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

குறித்த கைது நடவடிக்கை நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், 

குறித்த பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர், ஒரு முறைப்பாடு தொடர்பாக நபர் ஒருவரிடம் இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து நேற்றயதினம் நெடுங்கேணி பகுதிக்கு வருகைதந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சப்பணத்தின் ஒரு பகுதியை பெறமுற்பட்ட போது அவரை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் இன்றையதினம் வவுனியா நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டநிலையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

நெடுங்கேணி பொலிஸ் சாஜன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது வவுனியா - நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் சாஜன் தர உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர், ஒரு முறைப்பாடு தொடர்பாக நபர் ஒருவரிடம் இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.இதனையடுத்து நேற்றயதினம் நெடுங்கேணி பகுதிக்கு வருகைதந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சப்பணத்தின் ஒரு பகுதியை பெறமுற்பட்ட போது அவரை கைதுசெய்துள்ளனர்.கைதுசெய்யப்பட்டவர் இன்றையதினம் வவுனியா நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டநிலையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement