• Jul 07 2026

சிறைச்சாலை சம்பவத்தின் முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் ஏற்க வேண்டும் – சாகர காரியவசம்

Chithra / Jul 7th 2026, 4:06 pm
image


நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் முழுமையான பொறுப்பை நாட்டின் ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 


பத்தரமுல்ல நெலும் மாவத்தையில்  அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இன்று காலை நிலவரப்படி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த 20 கைதிகளும் 7 அதிகாரிகளும் என மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இது மிகவும் ஆபத்தான மற்றும் பயங்கரமான ஒரு சூழ்நிலை என்றும், நேற்று ஊடகங்கள் வாயிலாகக் காணக்கிடைத்த காட்சிகள் மிகவும் அருவருப்பானவை என்றும் கூறினார். 


ஒரு நாடு என்ற ரீதியில், இந்த சம்பவமானது இலங்கையை ஒரு காட்டுமிராண்டித்தனமான நிலைக்கு தள்ளியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறானதொரு செய்தி உலகிற்குச் செல்லும்போது இலங்கைக்கு முதலீட்டாளர்கள் வருவதை விடவும், இனிவரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கூட பாரிய கேள்விக்குறியாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்தார்.


தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், கடந்த காலங்களில் நாட்டின் நீதித்துறை, சட்ட அமலாக்கக் கட்டமைப்பு மற்றும் சிறைச்சாலை முறைமைகளில் ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினைகள் அனைத்தையும் மூடிமறைத்து, தங்களுக்குச் சாதகமான உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடித்து, அவர்களைத் திருப்திப்படுத்தி, தங்களுக்குத் தேவையான தீர்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் ஒரு கேவலமான முயற்சியிலேயே ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினார். 


கடந்த காலத்தில் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத, மிகவும் நேர்மையான மற்றும் திறமையான அதிகாரியாகக் கருதப்பட்ட துஷார உபுல்தெனிய சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஜனதா விமுக்தி பெரமுனவின் ஆதரவாளர் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.


துஷார உபுல்தெனியவை நீக்கியமை சட்டவிரோதமானது எனவும், எனவே அவரை மீண்டும் பதவியில் அமர்த்துமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டிருந்த போதிலும், நீதி அமைச்சின் செயலாளர் ஆயிஷா ஜினசேன அந்த உத்தரவைப் புறந்தள்ளி, அரசாங்கத்திற்குத் தேவையானவாறு செயற்பட்டு வருவதாகவும், அரசாங்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து அதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தனக்கான ஒரு பதவியைப் பெற்றுக்கொள்ளவே அவர் முயற்சிப்பதாகவும் சாகர காரியவசம் தெரிவித்தார். 


இதன் விளைவாக நாட்டின் நீதித்துறை முழுமையாக அழிவை நோக்கிச் சென்றுள்ளதுடன் சட்டத்தின் ஆட்சியும் முற்றாக சீர்குலைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், தங்களுக்குத் தேவையான தீர்ப்புகளைப் பெறுவதற்கும், தங்களுக்கு வேண்டிய நீதிபதிகளை நியமிப்பதற்கும், அவர்களின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கும் இந்த அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் உலக அரங்கில் இலங்கையை 'சட்டத்தின் ஆட்சி இல்லாத ஒரு நாடு' என முத்திரை குத்த வழிவகுக்கும் என்றும் கூறினார்.


மேலும், இந்த அரசாங்கம் கடந்த காலங்களில் நாட்டில் ஏதேனும் ஒரு பிரச்சினை எழும்போது, அதைவிடப் பெரியதொரு பிரச்சினையை உருவாக்கி முந்தைய பிரச்சினையை மூடிமறைப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மகா திறைசேரி கொள்ளை இடம்பெற்ற போதும், நபரொருவர் கழுத்தறுபட்டு இறந்த போதும் அவையெல்லாம் அவ்வாறே அமுக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். 


அதேபோல் நிலக்கரி ஊழல் வெளிவந்தபோது, எவ்வித காரணமுமின்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதன் மூலம் அது நாட்டின் பிரதான தலைப்பாக மாற்றப்பட்டு, நிலக்கரி ஊழல் மூடிமறைக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இவ்வாறு நாட்டில் ஒரு பிரச்சினை வரும்போது அரசாங்கமே திட்டமிட்டு அதைவிட பாரதூரமான வேறொரு பிரச்சினையை உருவாக்கி மக்களை திசைதிருப்பும் அற்பத்தனமான உத்தியையே ஆரம்பத்திலிருந்தே கையாண்டு வருவதாகவும் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

சிறைச்சாலை சம்பவத்தின் முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் ஏற்க வேண்டும் – சாகர காரியவசம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் முழுமையான பொறுப்பை நாட்டின் ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில்  அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இன்று காலை நிலவரப்படி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த 20 கைதிகளும் 7 அதிகாரிகளும் என மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இது மிகவும் ஆபத்தான மற்றும் பயங்கரமான ஒரு சூழ்நிலை என்றும், நேற்று ஊடகங்கள் வாயிலாகக் காணக்கிடைத்த காட்சிகள் மிகவும் அருவருப்பானவை என்றும் கூறினார். ஒரு நாடு என்ற ரீதியில், இந்த சம்பவமானது இலங்கையை ஒரு காட்டுமிராண்டித்தனமான நிலைக்கு தள்ளியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறானதொரு செய்தி உலகிற்குச் செல்லும்போது இலங்கைக்கு முதலீட்டாளர்கள் வருவதை விடவும், இனிவரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கூட பாரிய கேள்விக்குறியாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்தார்.தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், கடந்த காலங்களில் நாட்டின் நீதித்துறை, சட்ட அமலாக்கக் கட்டமைப்பு மற்றும் சிறைச்சாலை முறைமைகளில் ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினைகள் அனைத்தையும் மூடிமறைத்து, தங்களுக்குச் சாதகமான உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடித்து, அவர்களைத் திருப்திப்படுத்தி, தங்களுக்குத் தேவையான தீர்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் ஒரு கேவலமான முயற்சியிலேயே ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினார். கடந்த காலத்தில் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத, மிகவும் நேர்மையான மற்றும் திறமையான அதிகாரியாகக் கருதப்பட்ட துஷார உபுல்தெனிய சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஜனதா விமுக்தி பெரமுனவின் ஆதரவாளர் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.துஷார உபுல்தெனியவை நீக்கியமை சட்டவிரோதமானது எனவும், எனவே அவரை மீண்டும் பதவியில் அமர்த்துமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டிருந்த போதிலும், நீதி அமைச்சின் செயலாளர் ஆயிஷா ஜினசேன அந்த உத்தரவைப் புறந்தள்ளி, அரசாங்கத்திற்குத் தேவையானவாறு செயற்பட்டு வருவதாகவும், அரசாங்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து அதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தனக்கான ஒரு பதவியைப் பெற்றுக்கொள்ளவே அவர் முயற்சிப்பதாகவும் சாகர காரியவசம் தெரிவித்தார். இதன் விளைவாக நாட்டின் நீதித்துறை முழுமையாக அழிவை நோக்கிச் சென்றுள்ளதுடன் சட்டத்தின் ஆட்சியும் முற்றாக சீர்குலைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், தங்களுக்குத் தேவையான தீர்ப்புகளைப் பெறுவதற்கும், தங்களுக்கு வேண்டிய நீதிபதிகளை நியமிப்பதற்கும், அவர்களின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கும் இந்த அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் உலக அரங்கில் இலங்கையை 'சட்டத்தின் ஆட்சி இல்லாத ஒரு நாடு' என முத்திரை குத்த வழிவகுக்கும் என்றும் கூறினார்.மேலும், இந்த அரசாங்கம் கடந்த காலங்களில் நாட்டில் ஏதேனும் ஒரு பிரச்சினை எழும்போது, அதைவிடப் பெரியதொரு பிரச்சினையை உருவாக்கி முந்தைய பிரச்சினையை மூடிமறைப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மகா திறைசேரி கொள்ளை இடம்பெற்ற போதும், நபரொருவர் கழுத்தறுபட்டு இறந்த போதும் அவையெல்லாம் அவ்வாறே அமுக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். அதேபோல் நிலக்கரி ஊழல் வெளிவந்தபோது, எவ்வித காரணமுமின்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதன் மூலம் அது நாட்டின் பிரதான தலைப்பாக மாற்றப்பட்டு, நிலக்கரி ஊழல் மூடிமறைக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இவ்வாறு நாட்டில் ஒரு பிரச்சினை வரும்போது அரசாங்கமே திட்டமிட்டு அதைவிட பாரதூரமான வேறொரு பிரச்சினையை உருவாக்கி மக்களை திசைதிருப்பும் அற்பத்தனமான உத்தியையே ஆரம்பத்திலிருந்தே கையாண்டு வருவதாகவும் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement