• Jan 19 2026

தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை அவசியம்- இல்லையேல் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்! சுரேஷ் எச்சரிக்கை

Chithra / Jan 18th 2026, 9:56 am
image


தமிழினத்தின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் ஒற்றுமை தேவை என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.


தாங்கள் விரும்பியவாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விரும்பினால் அது நடக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


சமகால அரசியல் நிலைமை குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


பொது விடயங்களிலாவது தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.இதைவிடுத்து தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்னும் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படுவோமாக இருந்தால் அது பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும்.


தற்போதைய அரச தரப்பினர் கொள்கை ரீதியாக அதிகாரப் பகிர்வுக்கு எதிரானவர்கள். இந்த நாட்டில் தேசிய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமெனில் நிச்சயமாகப் புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். என்றார்.

தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை அவசியம்- இல்லையேல் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் சுரேஷ் எச்சரிக்கை தமிழினத்தின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் ஒற்றுமை தேவை என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.தாங்கள் விரும்பியவாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விரும்பினால் அது நடக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.சமகால அரசியல் நிலைமை குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,பொது விடயங்களிலாவது தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.இதைவிடுத்து தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்னும் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படுவோமாக இருந்தால் அது பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும்.தற்போதைய அரச தரப்பினர் கொள்கை ரீதியாக அதிகாரப் பகிர்வுக்கு எதிரானவர்கள். இந்த நாட்டில் தேசிய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமெனில் நிச்சயமாகப் புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement