பாகிஸ்தானில் மோசமான பனி மூட்டம் காரணமாக, பாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து சுமார் 200 கி.மீ. தூரத்தில் உள்ள சர்கோதா மாவட்டம் கோட் மொமின் என்ற பகுதியில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
கடும் பனி மூட்டம் காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டிருந்தது. இதனால் ஓட்டுனர் கிராமப்பகுதியில் உள்ள சாலை வழியாக லாரியை ஓட்டிச் சென்றார்.
லாரியில் இருந்த 23 பேர் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தனர்
இந்த நிலையில் குறித்த பகுதியில் பனி மூட்டத்தால் திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி பாலத்தில் இருந்து கீழே விழுந்த நிலையில் லாரியில் பயணித்த 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 8 பேர் குழந்தைகள் ஆவார்கள்.
காயம் அடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 5 பெண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணை மறைத்த கடும் பனி பாலத்திலிருந்து கீழே விழுந்த லாரி பலர் உயிரிழப்பு பாகிஸ்தானில் மோசமான பனி மூட்டம் காரணமாக, பாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.பாகிஸ்தானின் லாகூரில் இருந்து சுமார் 200 கி.மீ. தூரத்தில் உள்ள சர்கோதா மாவட்டம் கோட் மொமின் என்ற பகுதியில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.கடும் பனி மூட்டம் காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டிருந்தது. இதனால் ஓட்டுனர் கிராமப்பகுதியில் உள்ள சாலை வழியாக லாரியை ஓட்டிச் சென்றார்.லாரியில் இருந்த 23 பேர் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தனர் இந்த நிலையில் குறித்த பகுதியில் பனி மூட்டத்தால் திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி பாலத்தில் இருந்து கீழே விழுந்த நிலையில் லாரியில் பயணித்த 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 8 பேர் குழந்தைகள் ஆவார்கள்.காயம் அடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 5 பெண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.