• Jul 03 2025

மாட்டுடன் மோதி இரு இளைஞர்கள் பலி -யாழில் சற்றுமுன் நடந்த கோர விபத்து!

Thansita / Jul 2nd 2025, 9:47 pm
image

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு, புத்தூர் வீதியில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான இளைஞர்களில் ஒருவர், மிக சமீபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியிருந்தார். 

இன்று மாலை அவர்கள் இருவரும் அந்த வாகனத்தில் புத்தூர் வீதியில் பயணம் செய்தபோது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியில் உள்ள கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மாட்டுடன் மோதி இரு இளைஞர்கள் பலி -யாழில் சற்றுமுன் நடந்த கோர விபத்து சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு, புத்தூர் வீதியில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.விபத்துக்குள்ளான இளைஞர்களில் ஒருவர், மிக சமீபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியிருந்தார். இன்று மாலை அவர்கள் இருவரும் அந்த வாகனத்தில் புத்தூர் வீதியில் பயணம் செய்தபோது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியில் உள்ள கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.இதில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement